சொல் பொருள்
கூறை நாடு என்பது ஊர்ப் பெயர். கொர நாடு என வழங்குகின்றது. கூறை என்பது மகளிர் கட்டும் சீலையுடை. அதனை நெய்தலைத் தொழிலாகக் கொண்ட ஊர் கூறை நாடு எனப்பட்டது
சொல் பொருள் விளக்கம்
கூறை நாடு என்பது ஊர்ப் பெயர். கொர நாடு என வழங்குகின்றது. கூறை என்பது மகளிர் கட்டும் சீலையுடை. அதனை நெய்தலைத் தொழிலாகக் கொண்ட ஊர் கூறை நாடு எனப்பட்டது. ஊருக்கு நாடு என்னும் பெயரும் உண்டு. எ-டு: ஆண்மறைநாடு என்பது ஊர்ப்பெயர். கூறை நாட்டுப் புடவை திருமணத்திற்குச் சிறப்பாகக் கொள்ளப்பட்டதால் கூறைப்புடவை என்பது கூறை நாட்டுப் புடவை என்பதுடன் திருமணப்
புடவை என்னும் பொருளும் தருவதாயிற்று. கூறைச் சீலை என்பதும் அது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்