சொல் பொருள்
கிணறு, சிறிய குளம்
சொல் பொருள் விளக்கம்
கிணறு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
well, small tank
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேட்ட சீறூர் அகன் கண் கேணி பய நிரைக்கு எடுத்த மணி நீர் பத்தர் – நற் 92/5,6 வேட்டுவர்களின் சிறிய ஊரில் உள்ள அகன்ற வாயையுடைய கிணற்றிலிருந்து பயன்தரும் ஆநிரைகளுக்காக எடுத்து வைத்த தெளிந்த நீருள்ள தொட்டியில் ஊர் உண் கேணி உண்துறை தொக்க பாசி அற்றே பசலை – குறு 399/1,2 ஊரினர் உண்ணும் சிறிய குளத்தில் உண்ணும் துறையில் கூடிய பாசியைப் போன்றது பசலைநோய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்