சொல் பொருள்
குழந்தை என்னும் பொருளில் முஞ்சிறை வட்டாரத்தில் வழங்குகின்றது.
சொல் பொருள் விளக்கம்
கொச்சி என்னும் ஊரைக் குறிப்பது பொதுவழக்கு. குழந்தை என்னும் பொருளில் முஞ்சிறை வட்டாரத்தில் வழங்குகின்றது. ஊரின் பெயரிலுள்ளபற்றால் – அங்குக் கோயில் கொண்ட தெய்வப் பெயரால் – பெயரிடுதலும் வழக்கு ஆதலால், கொச்சி என்னும் பெயர் குழந்தைக்கு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், இது ஒரு குழந்தை பெயராக இல்லாமல் பொதுவில் குழந்தை என்னும் பொருளில் வருதலால் வேறு பொருள் இருத்தல் கூடும். கொஞ்சுதல் வழியாகவோ, ‘கொச்சிமஞ்சள்’ வழியாகவோ ஏற்பட்டதோ வேறோ எண்ணவேண்டும். இனி, ஆட்டுக்கு எனவும், பாலுக்கு எனவும் ஒரு வாடை உண்டு. அது கொச்சை எனப்படும். குழந்தைக்கென அமைந்த தனி வாடை – மணம் – கருதியதாகுமோ எனவும் எண்ணலாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்