சொல் பொருள்
கொடி என்பது சங்கிலி என்னும் பொருளில் நெல்லை, முகவை வட்டார வழக்காகும்
சொல் பொருள் விளக்கம்
படர்கொடியை அல்லாமல் செய்பொருள்கள் சில கொடி என வழங்கப்படுகின்றன. ஊர்வனவாம் பாம்பு கொடி என வழங்கப்படும். மின்னற் கொடி, மீன் கொடி அன்ன இயற்கையும் செயற்கையுமாம் கொடிகளும் உண்டு. ஆனால் வளையமாய்- சங்கிலியாய்-த் தொடரும் கொடியும் உண்டு. அவை தாலிக் கொடி, அரைஞாண் கொடி என்பன. கொடி என்பது சங்கிலி என்னும் பொருளில் நெல்லை, முகவை வட்டார வழக்காகும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்