சொல் பொருள்
ஒருவகைக் கூத்து, ஒரு சிவ நடனம்
சொல் பொருள் விளக்கம்
ஒருவகைக் கூத்து, ஒரு சிவ நடனம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a kind of dance, a dance by Lord Siva
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: படு பறை பல இயம்ப பல் உருவம் பெயர்த்து நீ கொடுகொட்டி ஆடும்_கால் கோடு உயர் அகல் அல்குல் கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ – கலி 1/5-7 ஒலிக்கின்ற பறைகள் பல முழங்க, பல்வேறு உருவங்களையும் உன்னுள்ளே அடக்கிக்கொண்டு நீ கொடுங்கொட்டி என்னும் கூத்தினை ஆடும்போது வளைவாக உயர்ந்த பின்பக்கத்தையும், கொடி போன்ற இடையும் கொண்ட இறைவி, தாளம் முடியுங் காலத்தைக் கொண்ட சீரைத் தருவாளோ? – கைகொட்டி ஆடும் கொடுகொட்டி என்ற கூத்து – மா.இரா.உரை. – கொடிதாகிய கொட்டி எனும் கூத்தை – நச்.உரை – கொடுங்கொட்டி, கொடுகொட்டி என விகாரமாயிற்று. கொடுங்கொட்டி என்றார் எல்லாவற்றையும் அழித்து – நின்று ஆடுதலின் – நச்.விளக்கம்.- இமையவன் ஆடிய கொடுகட்டி ஆடலும் – சிலப்.கடலாடு.43 – திரிபுரம் தீ மடுத்து எரியக்கண்டு இரங்காது கைகொட்டி ஆடுதலிற் கொடுமையுடைத்தாதல் நோக்கிக் – கொடுகொட்டி எனப் பெயர் கூறப்பட்டது. கொடுங்கொட்டி எனற்பாலது விகாரமாயிற்று – நாட்டார் உரை.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்