சொல் பொருள்
கொள்ளையில் போதல் – கொள்ளை நோயில் இறத்தல்
சொல் பொருள் விளக்கம்
கொள்ளை என்பது பெருங்களவை – ஊரெல்லாம் திரட்டியடித்துக் கொண்டுபோன பெருங்களவைக் குறிக்கும். கொள்ளை என்பது மிகுதிப் பொருளது. “கொள்ளை விலை” “கொள்ளை கொள்ளையாய் விளையும்”. என்பவற்றில் கொள்ளை மிகுதிப் பொருளாதல் அறிக. அது போல், பலரை ஒருங்கே கொல்லும் கொடிய கழிச்சல் நோய் (காலரா) கொள்ளை நோய் எனப்படும். பெரியம்மை நோயும் ஒரு காலத்தில் கொள்ளை நோயாக இருந்தது. எலி வழியே பற்றும் ‘பிளேக்’ என்பதோ பெருங்கோள்ளை நோய். இந்நோய்கள் மக்களைப் பெரிய அளவில் வாட்டிய நாளில் ‘கொள்ளையில் போதல்’ என்னும் வழக்கு எழுந்தது என்க. கொள்ளையில் போவான் என்பது வசையுரை.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்