சொல் பொருள்
கொள்வினை – மணமகளை மணமகன் மணம் கொள்ளுதல்
கொடுப்புவினை – மணமகனுக்கு மணமகளை மணமகள் வீட்டார் கொடுத்தல்.
சொல் பொருள் விளக்கம்
மணப் பெண் எடுத்தல் கொடுத்தல் ஆகிய சடங்குகளைக் கொள்வினை கொடுப்புவினை என்பர். கொள்ளுதல் கொடுத்தல் என்பவை மிகப் பழங்காலச் செய்தியாம். பெண்கொடுத்தல் பெண் எடுத்தல் என்னும் வழக்கமே இக்காலம் வரை உள்ளது. மாப்பிள்ளை எடுத்தல் கொடுத்தல் என்னும் வழக்கு இல்லாமையைக் கொண்டும் தெளிக.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்