சொல் பொருள்
கொழுத்தவன் – பணக்காரன், அடங்காதவன்
சொல் பொருள் விளக்கம்
கொழுப்பு என்பது கொழுமைப் பொருள்; ஊட்டம் தேங்கியுள்ள பொருள் கொழுப்பு. அக்கொழுப்பைக் குறியாமல், பணப்பெருக்கத்தைக் குறிப்பதாகவும் வழங்கும். அதனை விளக்கமாகக் ‘கொழுத்த பணம்’ என்றும் ‘கொழுத்த பணக்காரன்’ என்றும் கூறுவது உண்டு. உடல் வலிமை காட்டி அடிதடிகளில் முறைகேடாக ஈடுபடுபவனைக் கொழுத்தவன் என்பதும் வழக்கே. “கொழுப்பு அடங்கினால்தான் சரிக்கு வருவான்” என்பதால் கொழுப்பு தடிச்செயலுக்கு இடமாக இருத்தல் அறிக. “கொழுத்தவன் எல்லாம் ஒரு நாள் புழுத்து நாறும்போதுதான் உணர்வான்” என்பதன் கொழுப்பு அடாவடித்தனத்தைக் குறிப்பதே.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்