சொல் பொருள்
கோக்கு – ஒன்றைக் கோக்க வேண்டிய முறையில் கோத்தல்.
மாக்கு – கோக்க வேண்டிய முறையை மாற்றிக் கோத்தல்.
சொல் பொருள் விளக்கம்
ஏர், ஏற்றம், கட்டில், அணிகலம் முதலியவற்றைக் கோக்கு முறையில் கோவாமல் மாற்றிக் கோத்தல் பொருந்தாமை போலப் பொருந்தாமல் முறை கேடாகச் செய்யும் செயல் கோக்குமாக்காம். “எடுக்கவோ, அன்றிக் கோக்கவோ” என்பது பாரதச் செய்தி. ஒன்றிருக்க ஒன்றை ஏமாற்றிச் செய்வதைக் கோக்கு மாக்கு எனல் வழக்கு.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்