சொல் பொருள்
கொம்புகளையுடைய விலங்கு (காட்டுப்பன்றி, யானை. எருமை)
சொல் பொருள் விளக்கம்
கொம்புகளையுடைய விலங்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
boar, elephant. buffallo
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொடு வில் கானவன் கோட்டுமா தொலைச்சி பச்சூன் பெய்த பகழி போல – நற் 75/6,7 வளைந்த வில்லையுடைய வேட்டுவன் கொம்புகளையுடைய பன்றியைக் கொன்று அதன் பசிய ஊனில் பாய்ந்த அம்பினைப் போல கோட்டுமா வழங்கும் காட்டக நெறியே – ஐங் 282/5 கொம்புகளையுடைய யானைகள் நடமாடும் காட்டுக்குள்ளான வழியில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்