Skip to content

சொல் பொருள்

கோக்கப்பட்டது

கோக்கப்பட்டது கோப்பு. பலவகைப் பொருள்களை – மணிகளை – மலர்களை – இதழ்களை ஓர் ஒழுங்குற வைப்பது கோப்பு எனப்படும்

கோப்பு, விளக்கமாகக் கட்டுக்கோப்பு என்பதுமாம். கோப்பன் = பொலிவானவன். இது தென்னக வழக்கு.

செப்பமாகவும் பொருந்தவும் செய்யப்படும் செய் நேர்த்தி கோப்பு எனப்படும். அதனால் கோப்பு என்பது அழகு என்னும் பொருளமைந்த வழக்காகச் சோழவந்தான் வட்டாரத்தில் வழங்குகின்றது

கோப்பு உழவர் வழிச் சொல்லாகும். கல்வெட்டிலும் கோப்பு ஆட்சி உண்டு. ஏரிநீர், வயல்சென்று பாய்வதற்குப் பகுத்து விடுவதைக் கோப்பு என்பது வழக்கு

சொல் பொருள் விளக்கம்

கோக்கப்பட்டது கோப்பு. பலவகைப் பொருள்களை – மணிகளை – மலர்களை – இதழ்களை ஓர் ஒழுங்குற வைப்பது கோப்பு எனப்படும். இந்நாள் அலுவலகக் கோப்புகளையும் அந்நாள் கோவைகளையும் எண்ணுக. இக்கோப்பு மக்கள் வழக்கில் உடை, அணி, ஒப்பனை முதலியவற்றைக் கொண்டு பொலிவாக இருப்பவரை ‘அவர் கோப்பானவர்’ என்று பாராட்டாக உள்ளது. கோப்பு, விளக்கமாகக் கட்டுக்கோப்பு என்பதுமாம். கோப்பன் = பொலிவானவன். இது தென்னக வழக்கு.

செப்பமாகவும் பொருந்தவும் செய்யப்படும் செய் நேர்த்தி கோப்பு எனப்படும். அதனால் கோப்பு என்பது அழகு என்னும் பொருளமைந்த வழக்காகச் சோழவந்தான் வட்டாரத்தில் வழங்குகின்றது. கோத்தல், கோவை என்பவை ஒழுங்குறத் தொடுத்தல் அறிக.

கோப்பு உழவர் வழிச் சொல்லாகும். கல்வெட்டிலும் கோப்பு ஆட்சி உண்டு. ஏரிநீர், வயல்சென்று பாய்வதற்குப் பகுத்து விடுவதைக் கோப்பு என்பது வழக்கு. கட்டுக் கோப்பு என்பது, ஓர் ஒழுங்குபட்ட அமைப்பு ஆகும். இப்பகுதியில் பாய்நிலம் இவ்வளவு எனக் கணக்கு வைத்து அதற்குத் தக்க அளவு, பொழுது ஆயவை வரம்பு செய்து நீர்விடுவது கோப்பு ஆகின்றது.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

string

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மனவு கோப்பு அன்ன நன் நெடும் கூந்தல் – குறு 23/2

சங்குமணியைக் கோத்தது போன்ற நல்ல நெடிய கூந்தலையுடைய

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *