சொல் பொருள்
சட்டியெடுத்தல் – இரந்துண்ணல்
சொல் பொருள் விளக்கம்
ஓடெடுத்தல் போல்வது சட்டியெடுத்தல். ஓடு, திருவோடு; சட்டி – மண்சட்டி; இல்வாழ்வில் இருப்பவரும் வறுமைக்கு ஆற்றாமல் சட்டி எடுப்பது உண்டு. காவியர், பெரிதும் திருவோடு எடுப்பதே வழக்கு. இதுவே வேற்றுமை. நான் வறியவன் இல்லை என்பதைக் காட்ட “நான் என்ன சட்டியா எடுக்கிறேன்” என்பர்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்