சொல் பொருள்
(பெ) 1. பல வழிகள் கூடுமிடம், 2. சந்தன மரம், 3. மயிர்ச்சாந்து
சந்து – பொருத்து.
சந்து – சந்தை
சொல் பொருள் விளக்கம்
1. பல வழிகள் கூடுமிடம்
பொருத்து – தொடைப் பொருத்து (இடுப்பு) இரு பகைவர் பொருந்துதல். “இருவருக்குஞ் சந்து சொல்ல” (சிலப். 8. 101. அடியார்.)
சந்தை – பல கடைகள் கூடும் இடம். (வடமொழி வரலாறு. 70-71.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Crossing of many roads, sandalwood tree, Perfumed unguent for the hair
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பண்டு நற்கு அறியா புலம் பெயர் புதுவிர் சந்து நீவி புல் முடிந்து இடு-மின் – மலை 392,393 (அந்த வழிகள்)முன்பு(எப்படி இருந்தன என்று) நன்றாக அறியாத, நாடு மாறி வரும் புதியவராகிய நீங்கள் பல வழிகளும் கூடின அந்த சந்திகளைத் தொட்டுத்தடவிப் பார்த்து, அறிகுறியாகப் புற்களை முடிந்து வைப்பீர் அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை – அகம் 59/12 நல்லந்துவனார் பாடிய சந்தன மரங்கள் நிறைந்த உயர்ந்த மலை உரைத்த சந்தின் ஊரல் இரும் கதுப்பு – அகம் 102/3 பூசிய மயிர்ச் சாந்தினையுடைய பரந்த கரிய கூந்தல்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்