சொல் பொருள்
சம்பல் என்பது விலை மலிவு என்னும் பொருளது. அது பொது வழக்கு. ஆனால் விருந்து என்னும் பொருளில் பழனி வட்டார வழக்காக உள்ளது
சம்பல் என்பது விலை குறைதல் என்னும் பொருளில் வழங்கும் தென்னக வணிக வழக்குச் சொல். “வற்றல் விலை சம்பல்”; “வெங்காய விலை சம்பல்” என்பர்.
காய்கள் சாம்பிப் போனால் – சம்பிப் போனால் – சிறுத்துப் போய்விடும். இதனால் ஏற்பட்ட வழக்குச் சொல் இது
சொல் பொருள் விளக்கம்
சம்பல் என்பது விலை மலிவு என்னும் பொருளது. அது பொது வழக்கு. ஆனால் விருந்து என்னும் பொருளில் பழனி வட்டார வழக்காக உள்ளது. விருந்துக்கு வருவார்க்குக் கொடுக்கும் உணவு நெல்லுச் சோறே. சோளம், கேழ்வரகு, கம்பு ஆயவை இருப்பினும் நெற்சோறு ஆக்கிப் படைத்தலே வழக்கம். அதனால் சம்பு (சம்பா) ஆக்கிப் படைக்கும் விருந்தாளர் சம்பல் எனப்பட்டிருக்கலாம். இதனினும் பொருந்திய பொருளமைதி உண்டாயின் எண்ணலாம். இனி அடிக்கடி வரும் விருந்தினரை நோக்கியும் வழங்கிய தாகலாம்.
சம்பல் என்பது விலை குறைதல் என்னும் பொருளில் வழங்கும் தென்னக வணிக வழக்குச் சொல். “வற்றல் விலை சம்பல்”; “வெங்காய விலை சம்பல்” என்பர். பொருள் மிகுதியாவதைச் சவத்துப் போதல் என்பர். வதியழிதல் என்றும் கூறுவர். மலிவு என்பதும் அது. சம்பல், சாம்புதல். வாடுதல் என்னும் பொருளது. காய்கள் சாம்பிப் போனால் – சம்பிப் போனால் – சிறுத்துப் போய்விடும். இதனால் ஏற்பட்ட வழக்குச் சொல் இது
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்