சொல் பொருள்
(பெ) 1. சந்தன மரம், சந்தனக் கட்டை, சந்தனக்குழம்பு; பார்க்க: சாந்தம், 2. விழுது, மென்கலவை,
சொல் பொருள் விளக்கம்
1. சந்தன மரம், சந்தனக் கட்டை, சந்தனக்குழம்பு; பார்க்க: சாந்தம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sandal wood tree, sandal wood, sandal paste, Paste
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சாந்தில் தொடுத்த தீம் தேன் போல – நற் 1/4 சந்தனமரத்தில் சேர்த்துக்கட்டிய இனிய தேன்கூடு போல வேங்கை அம் கவட்டு இடை சாந்தின் செய்த களிற்று துப்பு அஞ்சா புலி அதள் இதணத்து – நற் 351/6,7 வேங்கை மரத்தின் பிரிகின்ற அழகிய கிளைகளுக்கிடையே சந்தனக் கடைகளால் செய்த களிற்றின் வலிமைக்கும் அஞ்சாத, புலித்தோல் விரித்த பரணில் நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின் – திரு 193 நறிய சந்தனத்தைப் பூசின நிறம் விளங்கும் மார்பினையுடைய; வடு படு மான்_மத_சாந்து ஆர் அகலத்தான் – பரி 16/44 உருக்குலைந்துபோன கத்தூரி மென்கலவை நிறைந்த மார்பினையுடைவன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்