சொல் பொருள்
சாய்தல் – படுத்தல், உறங்குதல், இறத்தல்
சொல் பொருள் விளக்கம்
மரம் சாய்தல், தூண் சாய்தல், சுவர் சாய்தல் என்பன சாய்தலாம். இவ்வாறே மாந்தர் படுப்பதும் ‘சாய்தல்’ எனப்படுவதாயிற்று. சிலர், “கொஞ்சம் பொழுதேனும் கட்டையைச் சாய்த்தால் தான் தாங்கும்; உடலுக்கு ஒரே அலுப்பு” என்பர். திண்டு முதலியவற்றில் சாய்ந்திருத்தலும் சாய்தலே. முழுதுடலும் கிடத்திப் படுத்தலும் சாய்தலே. “பறவைகளுக்குக் கூடுண்டு; விலங்குகளுக்குக் குகையுண்டு; மனித குமரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை” என்பது கிறித்தவ மறைக் குறிப்பு. இனி “ஆள் சாய்ந்து விட்டது” என்பதில், இறப்புப் பொருளும் இடம் பெறும். “படு கட்டை சாய்ந்து விட்டது” என்பர்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்