சொல் பொருள்
(பெ) சாளரம், பலகணி,
சலசலத்து ஓடும் நீர் சலம் ஆகும். சலம் ஓடும் அங்கணம் திருச்செந்தூர் வட்டாரத்தில் ‘சாலகம்’ எனப்படும்
சொல் பொருள் விளக்கம்
சலசலத்து ஓடும் நீர் சலம் ஆகும். சலம் ஓடும் அங்கணம் திருச்செந்தூர் வட்டாரத்தில் ‘சாலகம்’ எனப்படும். நீர்ப்பிறை பழமையானது என்பது “அங்கணத்துள் உக்க அமிழ்து” என்னும் திருக்குறளால் வெளிப்படும். ஊர் வடிகால், ‘ஊரங்கண நீர்’ என்று நாலடியாரில் கூறப்படும்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
latticed window
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீல நிரை போது உறு காற்கு உலைவன போல் சாலகத்து ஒல்கிய கண்ணர் – கலி 83/12,13 நீல நிறத்தில் வரிசையாக நிற்கும் மலர்கள், மோதுகின்ற காற்றால் முன்னும் பின்னும் அசைவது போல் சாளரங்களின் வழியே உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கும் மகளிர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்