சொல் பொருள்
(பெ) செந்நெல்
நெல்லுக்குச் சாலி என்பது ஒருபெயர்
முள் போன்றது. அச் சாலி வழிப்பட்டுக் கருவேல் சீமைக் கருவேல் என்பவை முறையே எழுமலை வட்டாரத்திலும், திருமங்கலம் வட்டாரத்திலும் வழங்குகின்றன
சொல் பொருள் விளக்கம்
நெல்லுக்குச் சாலி என்பது ஒருபெயர். ‘சால’ என்னும் உரிச்சொல் வழியாகப் பெற்றபெயர். நெல்லின் கூர் நுனை கிழிக்கவல்ல கூர்மை பெற்றது. முள் போன்றது. அச் சாலி வழிப்பட்டுக் கருவேல் சீமைக் கருவேல் என்பவை முறையே எழுமலை வட்டாரத்திலும், திருமங்கலம் வட்டாரத்திலும் வழங்குகின்றன. “சால உறு தவ நனி கூர் கழி மிகல்” என்பது நன்னூல்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a superior quality of paddy
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சாலி நெல்லின் சிறை கொள் வேலி – பொரு 246 செந்நெல் விளைந்துநின்ற, வரம்பு கட்டின ஒரு வேலி அளவுள்ள நிலம்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்