சொல் பொருள்
சிண்டைப் பிடித்தல் – செயலற்றுப்போக நெருக்குதல்
சொல் பொருள் விளக்கம்
சிண்டாவது உச்சிக்குடுமி. அதனைப் பிடித்தல் எளிது. முழுமையாக வளைத்துப் பிடிக்கலாம் செயலற்றுப் போகவும் செய்துவிடலாம். இச்செயலில் இருந்து பலவகையாலும் நெருக்கடியுண்டாக்கி வருந்தச் செய்தலும் சிண்டைப் பிடித்தலாக வழங்கலாயிற்று. “சரியாக சிண்டு அவனிடம் மாட்டிக்கொண்டது; இனித் தப்புவது கடினம்தான்” என்பது நெருங்குதல் அல்லது செயலற்றுப் போகச் செய்தல் வழி வரும் சிண்டாம். சிண்டைப் பிய்த்தல் தன்துயர் நிலை. சிண்டைப் பிடித்தல் பிறரைத் துயருத்தும் நிலை.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்