சொல் பொருள்
1. (வி) 1. சிந்து, சிதறு, 2. பிரி, விலக்கு, 3. கிளறு, 4. நைந்துபோ
2. (பெ) 1. மழைத்துளி, 2. வண்டு
சொல் பொருள் விளக்கம்
1. சிந்து, சிதறு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
scatter, strew, split, scratch, be worn out, rain drop, beetle
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடும் சினை – சிறு 254 சிந்துகின்ற அரும்புகளையுடைய முருக்கினுடைய மிகவும் வளர்ந்த நெடிய கிளையினில் மிளகு பெய்து அனைய சுவைய புன் காய் உலறு தலை உகாஅய் சிதர் சிதர்ந்து உண்ட – நற் 66/1,2 மிளகினைப் பெய்து சமைத்தது போன்ற சுவையை உடைய புல்லிய காய்களை, உலர்ந்த உச்சிக்கிளைகளைக் கொண்ட உகாய் மரத்தில், வண்டுகளை விலக்கிவிட்டு உண்டு, சிதர் நனை முணைஇய சிதர் கால் வாரணம் – நற் 297/7 வண்டுகள் மொய்க்கும் அரும்புகளைக் கொத்தித் தூக்கியெறிந்த, கிளறுகின்ற கால்களையுடைய கோழி சிதாஅர் வள்பின் சிதர் புற தடாரி – புறம் 381/12 துண்டித்த வார்களால் கட்டப்பட்ட நைந்துபோன வெளிப்பக்கத்தையுடைய தடாரிப்பறை சிதர் வரல் அசை வளிக்கு அசைவந்து ஆங்கு – முல் 52 துவலைத் தூறலுடன் மெல்ல வரும் காற்றிற்கு அசைந்தாற்போல மிளகு பெய்து அனைய சுவைய புன் காய் உலறு தலை உகாஅய் சிதர் சிதர்ந்து உண்ட – நற் 66/1,2 மிளகினைப் பெய்து சமைத்தது போன்ற சுவையை உடைய புல்லிய காய்களை, உலர்ந்த உச்சிக்கிளைகளைக் கொண்ட உகாய் மரத்தில், வண்டுகளை விலக்கிவிட்டு உண்டு,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்