சொல் பொருள்
பதனீர் வடிகட்டும் பன்னாடையைச் சில்லாட்டை என்பது நாகர்கோயில் வட்டார வழக்கு
சொல் பொருள் விளக்கம்
பதனீர் வடிகட்டும் பன்னாடையைச் சில்லாட்டை என்பது நாகர்கோயில் வட்டார வழக்கு. சிறிய வடிகட்டி என்னும் பொருளது. பன்னாடை பனைமடலில் உள்ள வலைப் பின்னல். அட்டை என்னும் சொல்லீறு ஆட்டை என்றும் வழங்கும் சான்று இது. சில் = சிறிது; சில்லுக் கருப்புக் கட்டி, சில்லான், சில்லைக் குடில் என இருவகை வழக்கிலும் உள்ளது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்