சொல் பொருள்
கால் கைவலி (காக்கை வலி) உண்டாயவர் சுழல்தலால் அந்நோயைச் சுழலி என்பது விளவங்கோடு வட்டார வழக்காகும்
கிறுக்குப் பிடித்தவர்க்குத் தலைச் சுழற்சியும் அவர் ஓரிடத்திராது சுற்றலும் கருதிக் கல்வளை வட்டாரத்தார் அதனைச் சுழலி என வழங்குவர்
‘ரிவால்வர்’ என்பதைச் ‘சுழலி’ என்றார் பாவாணர்
சொல் பொருள் விளக்கம்
சுழல்வது சுழலி; சுழல வைப்பதும் சுழலி. கால் கைவலி (காக்கை வலி) உண்டாயவர் சுழல்தலால் அந்நோயைச் சுழலி என்பது விளவங்கோடு வட்டார வழக்காகும். கிறுக்குப் பிடித்தவர்க்குத் தலைச் சுழற்சியும் அவர் ஓரிடத்திராது சுற்றலும் கருதிக் கல்வளை வட்டாரத்தார் அதனைச் சுழலி என வழங்குவர். ‘ரிவால்வர்’ என்பதைச் ‘சுழலி’ என்றார் பாவாணர்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்