சொல் பொருள்
சூடேற்றல் – வெதுவெதுப்பான சுவைநீர் பருகுதல் (குளம்பி, தேநீர் முதலியன குடித்தல்)
சொல் பொருள் விளக்கம்
குளிராகக் குடித்தல், வெதுப்பாகக் குடித்தல் எனக் குடிவகைகள் இரண்டு. அவற்றுள் வெதுப்பாகக் குடிப்பன தேநீர், குளம்பி (காஃபி) கோகோ, சுவை நீர் (போன்விட்டா) முதலியவாம். இவற்றுள் முன்னவை இரண்டும் பெருவழக்கில் உள்ளவை. எங்கும் கிடைப்பவை, அடிக்கடி குடிப்பவை. அவற்றைக் குடிப்பது சூடேற்றலாக வழக்கில் உள்ளது. சூடுபோடுதல், சூடுவைத்தல், சுடுதல் என்பவை இல்லாமல் சுடு நீர்க்குடிகளைக் குடிப்பது சூடேற்றலாக வழங்கப்படுவது வழக்குச் சொல்லாம். “சூடேற்றி விட்டு வந்து பார்க்கலாம் வாருங்கள்” என்பது அலுவலக உரையாடற் செய்தி.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்