சொல் பொருள்
1. (வி) சபதம்செய்,ஆணையிடு, சங்கற்பம்செய், 2. (பெ) சபதம், ஆணை, சங்கற்பம்,
சொல் பொருள் விளக்கம்
(வி) சபதம்செய்,ஆணையிடு, சங்கற்பம்செய்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
vow, take an oath, declare solemnly
vow, oath, pledge
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அறவர் அடி தொடினும் ஆங்கு அவை சூளேல் – பரி 8/68 அறவோர்களின் அடியைத் தொட்டு மொழிந்தாலும் மொழியலாம், ஆனால் மேற்கூறியவற்றைக் குறித்துச் சூளுரைக்கவேண்டாம்; மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியை தலையினால் தொட்டு உற்றேன் சூள் – கலி 108/55,56 மலையைப் போல் அமைந்த மார்புடைய செல்வனான திருமாலின் அடியைத் தலையினால் தொட்டுச் சொல்கிறேன், இது உறுதி”
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்