சொல் பொருள்
(பெ) 1. தூரம், சேய்மை, 2. உயரம், 3. நெடுங்காலம்,
சொல் பொருள் விளக்கம்
தூரம், சேய்மை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
remoteness, distance, height, loftiness, long span of time
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி – திரு 3 ஒழிவு இல்லாமல் மின்னும் சேய்த்துநின்று ஒளிரும் பிரகாசமான ஒளியையுடைய சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடும் சினை – சிறு 254 மழைத்துளியில் நனைந்த முருக்க மரத்தின் மிக்க உயரத்திற்கு வளர்ந்த நீண்ட கொம்பில் திரியா சுற்றமொடு முழுது சேண் விளங்கி நடுக்கு இன்றி நிலியரோ – புறம் 2/19,20 வேறுபாடில்லாத மந்திரிச் சுற்றத்தோடு ஒழியாது நெடுங்காலம் விளங்கி துளக்கமின்றி நிற்பாயாக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்