சொல் பொருள்
சேறு – நீரொடு கூடிக் குழைந்த மண் சேறு ஆகும்.
தொளி – நெல் நடவுக்காக உழுது கூழாக்கப்பட்ட நெகிழ்வான அல்லது குழைந்த நிலம் தொளியாகும்.
சொல் பொருள் விளக்கம்
நடவில் ‘தொளி நடவு’ என்பதொன்று. கை வைத்த அளவில் நாற்றுப் பயிர் சேற்றுள் தொள தொளப்பாகப் போய் ஊன்றிக் கொள்ள வாய்ப்பானது அது. ஆகலின் ‘தொளி’ எனப்பட்டதாம். சேறு நீரொடு கூடிக் குழைந்த மண் எனினும், கட்டிப்பட்ட இறுக்கமும் உடையதாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்