Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

ஆள்வீடு

சொல் பொருள் வீட்டின் நடுப்பகுதி குறிப்பது ஆள்வீடு என்பதாகும் சொல் பொருள் விளக்கம் முன்பகுதியும் குறியாமல் பின்பகுதியும் குறியாமல் வீட்டின் நடுப்பகுதி குறிப்பது ஆள்வீடு என்பதாகும். இது நாட்டுக்கோட்டையார் வழக்கு. குடும்பத்து ஆள்களே தங்கியும்… Read More »ஆள்வீடு

ஆள் காந்தி

சொல் பொருள் வேண்டா ஆளைக் கண்டதும் எரிந்து விழுபவன் அல்லது எரிந்து விழுபவளை ஆள் காந்தி என்பது கோட்டாறு வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் வேண்டா ஆளைக் கண்டதும் எரிந்து விழுபவன் அல்லது… Read More »ஆள் காந்தி

ஆரியம்

சொல் பொருள் கேழ்வரகுக் கதிர் ஆரியம் (ஆர் இயம்) எனப்பட்டதாகலாம். ‘ஆரியம்’ என்னும் மொழிப் பெயர் பொதுவழக்கு. சொல் பொருள் விளக்கம் கையின் விரல்களை மடிப்பதைப் பூட்டிய கை என்பர். கேழ்வரகின் கதிர் கையைப்… Read More »ஆரியம்

ஆரச் சுவர்

சொல் பொருள் வீட்டைச் சுற்றி எழுப்பும் சுவரை ஆரைச் சுவர் என்பது முகவை வழக்கு சொல் பொருள் விளக்கம் ஆரை = மதில். ஆரைச் சுவர் > ஆரச்சுவர். வீட்டைச் சுற்றி எழுப்பும் சுவரை… Read More »ஆரச் சுவர்

ஆயான்

சொல் பொருள் ஆக்களுக்கு ஆயன்போல மாணவர்களுக்குக் குருவாக வாழ்ந்தவர் ஆயான் எனப்பட்டனர் சொல் பொருள் விளக்கம் ஆயன் ஆக்களை வளர்ப்பவன். மேய்ப்பன் என்பானும் அவன். புத்தர் கிறித்து திருமூலர் கண்ணன் ஆனாயர் என்பார் குருத்துவ… Read More »ஆயான்

ஆய்தல்

சொல் பொருள் நுணுகுதல் வேண்டாததைத் தள்ளுதல் ஆய்தல் எனப்படும். மேலிட்டுத் தோன்றல் என்னும் சிறப்பை விளக்குவது இது. சொல் பொருள் விளக்கம் கீரை ஆய்தல், கொத்தவரை ஆய்தல் என்பன பொது வழக்கு. கொள்ளத் தக்கதைக்… Read More »ஆய்தல்

ஆய்

சொல் பொருள் ஆய் அண்டிரன் கடையெழு வள்ளல்களுள் ஒருவன் ஆ உணவு ஆதலால், அது செரித்து அற்றுப் போனது ‘ஆய்’ எனப்பட்டதாம் சொல் பொருள் விளக்கம் குழந்தை தொடக்கூடாத அருவறுப்புப் பொருளை ‘ஆய்’ என ஒலியால்… Read More »ஆய்

ஆமக்கன்

சொல் பொருள் தலைவன் அல்லது கணவன் சொல் பொருள் விளக்கம் அகம் > ஆம் + அக்கன் = ஆமக்கன். வீட்டுக்குத் தலைவனானவனை ‘ஆமக்கன்’ என்பது முகவை வட்டார வழக்கு. அகம் = வீடு;… Read More »ஆமக்கன்

ஆணி

சொல் பொருள் ஆணி என்பது நடு, நடுவு நிலை எனப்பட்டது. ஆணிப்பொன், ஆணிமுத்து என்பவை தரப்பாடு செய்யப்பட்டதன் அடையாளமமைந்த பொன்னும் முத்துமாம் வடமொழியில் வண்டியின் அச்சாணியைக் குறிக்கும். சொல் பொருள் விளக்கம் நுகக்கோலின் ஊடே… Read More »ஆணி

ஆடை

சொல் பொருள் ஆடை – கார் காலம் சொல் பொருள் விளக்கம் உடை, பாலாடை, பன்னாடை என்பவற்றைக் குறியாமல் ஆடை கோடை எனக்காலப் பெயர் குறிப்பதாக மக்கள் வழக்கில் உள்ளது. இவ்விணைச் சொல்லில் வரும்… Read More »ஆடை