Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

வயிற்றைக்கட்டுதல்

சொல் பொருள் வயிற்றைக்கட்டுதல் – உணவைக் குறைத்தல் சொல் பொருள் விளக்கம் வயிற்றுப் பாடு பெரிது. மூவேளையுண்டாலும் இடையிடை வேண்டியும் கிடப்பது. ஒரு வேளை உணவுக்கும் வழியில்லாதவர் நிலைமை என்னாம்? அத்தகையவர்க்கும் வேறு வேறு… Read More »வயிற்றைக்கட்டுதல்

வந்தேறி

சொல் பொருள் வந்தேறி – அயல்நாட்டில் இருந்து வந்தவர் சொல் பொருள் விளக்கம் வந்து ஏறுபவர் வந்தேறி எனப்படுவர். வருதல் நாடு தாண்டி நாடு வருதல். ஒரு நாட்டார் மற்றொரு நாட்டிற்கு உரிமை பெறாமல்… Read More »வந்தேறி

வண்ணங்கொடுத்தல்

சொல் பொருள் வண்ணங்கொடுத்தல் – பொய்யை மெய்யாக்கல் சொல் பொருள் விளக்கம் பூசுதல் போல்வது வண்ணங் கொடுத்தல். வண்ணங்குலைந்த பொருள்களை வண்ணமேற்றிப் புதிதுபோல் காட்டி ஏமாற்றி வருதல் இந்நாளில் பெருக்கமாம். வண்ணங்கொடுத்தலால் நல்ல எண்ணங்கொடுத்து… Read More »வண்ணங்கொடுத்தல்

வண்டவாளம்

சொல் பொருள் வண்டவாளம் – தன்மை கெட்ட செயல்கள் சொல் பொருள் விளக்கம் “உன் வண்டவாளத்தைத் தண்டவாளத்தில் ஏற்றுகிறேனா; இல்லையா! பார்!” என்பது எரிச்சல் வெளிப்பாடு. இதில் வண்டவாளம் என்பது தகுதியில்லாத செயல்கள் தண்டவாளத்தில்… Read More »வண்டவாளம்

வடிப்பம்

சொல் பொருள் வடிப்பம் – அழகு, கூர்மை சொல் பொருள் விளக்கம் வடிவு – அழகு; வடிக்கப்பட்ட சிற்பம் வடிப்பமாம். கண்டார் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து உள் நிறுத்தத் தக்க வடிவு வடிப்பம் எனப்படும்.… Read More »வடிப்பம்

மொய் வைத்தல்

சொல் பொருள் மொய் வைத்தல் – பணம் தருதல் சொல் பொருள் விளக்கம் மொய்த்தல் என்பது பலவாக நெருங்குதல், ஈமொய்த்தல் எறும்பு மொய்த்தல் என்பன வழக்குகள். ஒரே வேளையில் பலரும் கூடிச் சேர்ந்து கொடை… Read More »மொய் வைத்தல்

மொண்ணை

சொல் பொருள் மொண்ணை – கூர்மை இல்லாமை சொல் பொருள் விளக்கம் மொட்டை, மழுக்கை என்பவை போன்ற பொருளதே மொண்ணை. முனை அல்லது நுனை மழுங்கிய கருவி மொண்ணை எனப்படும். அவ்வாறே கூர்ப்பில்லாதவன் (மூடன்)… Read More »மொண்ணை

மொட்டையடித்தல்

சொல் பொருள் மொட்டையடித்தல் – வெறுமையாக்கல் சொல் பொருள் விளக்கம் மரங்களை மொட்டை தட்டல், மொட்டையடித்தல் போல் செல்வத்தை மொட்டை தட்டலாக வழங்குகின்றது. தலையை மொட்டை போட்டால் மழுக்கையாதல் போல உள்ளவை உரியவை எல்லாம்… Read More »மொட்டையடித்தல்

மொட்டைச்சி

சொல் பொருள் மொட்டைச்சி – கைம்மையாட்டி சொல் பொருள் விளக்கம் கணவனை இழந்த பெண்ணுக்கு ஒரு காலத்தில் மொட்டை போடுதல் வழக்காக இருந்தது. அவ்வழக்கம் அண்மைக்காலம் வரை கூட இருந்தது. அவ்வழக்கமும், குறித்த இன… Read More »மொட்டைச்சி

மேனித்து

சொல் பொருள் மேனித்து – உழையாமை சொல் பொருள் விளக்கம் குனியாமல் வளையாமல் (வேலையின்றித்) திரிவதை மேனித்தாகத் திரிதல் என்பர். “மேல் வலிக்காமல் சாப்பிட வேண்டும், அவ்வளவுதான் வேலை” என்பது மேனித்தரைப் பற்றிச் சொல்லும்… Read More »மேனித்து