Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

கொடுத்து வைத்தல்

சொல் பொருள் கொடுத்து வைத்தல் – எதிர்பாராத வாய்ப்புப் பெறுதல் சொல் பொருள் விளக்கம் அரும்பாடு படும் சிலர் எதிர்பார்த்ததை அடைய முடியாமல் தவிப்பர். ஆனால் சிலர் சில வாய்ப்புகளால் எளிமையாக அதனை வரப்பெற்று… Read More »கொடுத்து வைத்தல்

கொடித் தடுக்கல்

சொல் பொருள் கொடித் தடுக்கல் – பாம்புதீண்டல். சொல் பொருள் விளக்கம் கொடி என்பது கொடிபோல் சுருண்ட பாம்பைக் குறித்தது. பாம்பு தீண்டியது என்று சொல்லவும் கூடாது என்னும் கருத்தால் அதனைக் கொடித் தடுக்கியது… Read More »கொடித் தடுக்கல்

கொட்டுதல்

சொல் பொருள் கொட்டுதல் – வசைமொழிதல், கொடுத்தல், ஒழுக விடல், சிதறவிடல் சொல் பொருள் விளக்கம் கொட்டுதல் என்பது ஒரு பொருளை ஒழுக விடல், சிதறவிடல் என்னும் பொருளில் வருவது. தேள் கொட்டுதல் என்பதும்… Read More »கொட்டுதல்

கையோங்குதல்

சொல் பொருள் கையோங்குதல் – வெற்றி, செல்வம் ஆகியவை மிகுதல் சொல் பொருள் விளக்கம் கை என்பது பக்கம் என்னும் பொருளும் தருவது. இருபக்கத்தார் விளையாட்டு, போர், பொருளீட்டல் முதலியவற்றில் ஈடுபடுங்கால் அந்தக் கையிலும்… Read More »கையோங்குதல்

கையாள்

சொல் பொருள் கையாள் – குறிப்பறிந்து செய்பவன். சொல் பொருள் விளக்கம் கைகாரனாக இருப்பவன் தனக்குக் கையாள் வைத்திருப்பது வழக்கம். கைகாரன் என்ன நினைக்கிறானோ அந்நினைப்பைக் குறிப்பாலேயே அறிந்து செயலாற்றுவதில் தேர்ந்தவன் கையாள் ஆவான்.… Read More »கையாள்

கையாலாகாதவன் – செயலற்றவன்

சொல் பொருள் கையாலாகாதவன் – செயலற்றவன் சொல் பொருள் விளக்கம் கையிருக்கும். எடுப்பான் ; கொடுப்பான் ; கைவேலை செய்வான். எனினும் கையாலாகாதவன் எனப் பெயரும் பெறுவான். எப்படி? வீட்டுக்கோ அலுவலகத்திற்கோ தொழிற்சாலைக்கோ பொறுப்பாளனாக… Read More »கையாலாகாதவன் – செயலற்றவன்

கையடித்தல்

சொல் பொருள் கையடித்தல் – உறுதி செய்தல் சொல் பொருள் விளக்கம் ஒன்றை ஒப்புக் கொண்டு உறுதி சொல்பவரும், ஒன்றைத் தந்ததாக வாக்களிப்பவரும் ‘கையடித்துத்’ தருதல் உண்டு. ஒருவர் கைமேல் ஒருவர் கையை வைத்து… Read More »கையடித்தல்

கைப்பிடித்தல் – மணமுடித்தல்

சொல் பொருள் கைப்பிடித்தல் – மணமுடித்தல் சொல் பொருள் விளக்கம் கையைப் பிடித்தல் என்னும் பொருளை விடுத்துத் திருமணம் என்னும் பொருளைத் தருவது கைப்பிடித்தலாம். திருமண நிறைவேற்றத்தின் பின்னர் பெண்ணைப் பெற்றவர் மாப்பிள்ளையின் கையில்… Read More »கைப்பிடித்தல் – மணமுடித்தல்

கைந்நீளல்

சொல் பொருள் கைந்நீளல் – தாராளம், அடித்தல் , திருடல் சொல் பொருள் விளக்கம் கைந்நீட்டல் ‘கொடை’ என வழங்கப்படுகிறது. “அவன் கைநீட்ட மாட்டான்” என்பது கொடான் என்னும் குறிப்பினதாம். ‘கைந்நீளம்’ என்பது கையின்… Read More »கைந்நீளல்

கைத்தூய்மை

சொல் பொருள் கைத்தூய்மை – களவு திருட்டுச் செய்யாமை சொல் பொருள் விளக்கம் ‘கைசுத்தம்’ என்பர். கைசுத்தம் நீரால் கழுவுவதால் ஏற்படும். இது, களவு, திருட்டு எனக்கொள்ளாமையால் ஏற்படுவது. கையும் வாயும் சுத்தமாக இருந்தால்… Read More »கைத்தூய்மை