Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

குறுக்கே விழுதல்

சொல் பொருள் குறுக்கே விழுதல் – தடுத்தல் சொல் பொருள் விளக்கம் ஒருவர் ஒரு செயல் மேற்கொண்டு புறப்படுங்கால் அவர் போக்கைத் தடுத்து ‘என் வாக்கைக் கேட்டுவிட்டுப்போ’ என்பதற்கு அடையாளமாக நிறுத்துவதற்குக் குறுக்கே விழுதல்… Read More »குறுக்கே விழுதல்

குளிப்பாட்டல்

சொல் பொருள் குளிப்பாட்டல் – வயப்படுத்துதல், புகழ்தல். சொல் பொருள் விளக்கம் நீரால் குளிப்பாட்டல் காணக் கூடியது. குழந்தை, முதியர்,நோயர் ஆகியோரைத்தாம் குளிப்பாட்டல் என்பது இல்லாமல் செல்வர்களையும் குளிப்பாட்ட ஆட்கள் உண்டு. இக்குளிப்பாட்டுதல் மகிழ்வளிப்பது!… Read More »குளிப்பாட்டல்

குழையடித்தல்

சொல் பொருள் குழையடித்தல் – ஏமாற்றல். சொல் பொருள் விளக்கம் நோய் நொடி என்று ஒருவர்க்கு ஏற்பட்டால் அவர்களுக்கு மந்திரிப்பவர்கள் வேப்பங்குழையை எடுத்து வீசித் தண்ணீர் தெளிப்பதுண்டு. நம்பிக்கையால் நோய் நீங்கியதாகச் சொல்வதும் உண்டு.… Read More »குழையடித்தல்

குழைதல்

சொல் பொருள் குழைதல் – அன்புளதுபோல் நடித்தல் சொல் பொருள் விளக்கம் ‘சோறு குழைதல்’ ‘மண்குழைத்தல்’ என்பவை வழக்கில் உள்ளவை. நாய் வாலைக் குழைத்தல் கண்கூடு. மரத்தில் குழைகள் எழுந்தும் வீழ்ந்தும் பிரிந்தும் சேர்ந்தும்… Read More »குழைதல்

குலுங்காமல்

சொல் பொருள் குலுங்காமல் – நாணமில்லாமல் சொல் பொருள் விளக்கம் மானங் கெடுமாறு ஒரு சொல்லைச் சொன்னால் உடனே தலை தாழும்; மனம் நடுங்கும்; கால்கைகள் உதறும்; இது தாங்கிக் கொள்ள முடியாமல், இப்படியாகி… Read More »குலுங்காமல்

குப்பை கொட்டல்

சொல் பொருள் குப்பை கொட்டல் – சங்கடத்தோடு அல்லது சலிப்போடு வாழ்தல் சொல் பொருள் விளக்கம் “உன்னோடு இவ்வளவு காலமாகக் குப்பை கொட்டி என்ன கண்டேன்”. என்று சலித்துப் பேசுவது கேட்கப்படும் செய்தி.குப்பை கொட்டல்… Read More »குப்பை கொட்டல்

குந்தாணி வேர்விடல்

சொல் பொருள் குந்தாணி வேர்விடல் – நடவாதது நடத்தல் சொல் பொருள் விளக்கம் குந்தாணி என்பது தகரத்தால் செய்யப்பட்டது. ஒரு கல்லின் மேல் அதை வைத்துத் தவசம் போட்டு இடிக்கப் பயன்படுத்துவர். உரலின் மேல்… Read More »குந்தாணி வேர்விடல்

குதிரையில் வருதல்

சொல் பொருள் குதிரையில் வருதல் – குடிமயக்கில் தள்ளாடிவருதல். சொல் பொருள் விளக்கம் ‘கள்’ வெண்ணிறமானது. அதனால் வெள்ளை எனப்படும். அது தண்ணீர் போல்வது. அதனால் வெள்ளைத் தண்ணீர் என்றும் தண்ணீர் என்றும் வழங்கப்படும்;… Read More »குதிரையில் வருதல்

குதிர்

குதிர்

குதிர் – நெல் முதலிய தானியங்களைச் சேமிக்கும் பெரிய கூடு, ஒரு வகை குறுமரம், சுற்றுப் பருத்தல் சொல் பொருள் (பெ) 1. நெல் முதலிய தானியங்களைச் சேமிக்கும் பெரிய கூடு, 2. ஒரு… Read More »குதிர்

குத்திக்காட்டல்

சொல் பொருள் குத்திக்காட்டல் – பழங்குறையை எடுத்தல் கூறல் சொல் பொருள் விளக்கம் குத்துக்குக் கத்தி வேண்டும். இக்குத்து கத்தியில்லாக் குத்து. கத்திக்குத்தினும் கடுவலியும் காலமெல்லாம் மாறாத்தனமும் உடையது. எப்பொழுதோ ஒரு தவறு நிகழ்ந்திருக்கும்.… Read More »குத்திக்காட்டல்