Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

ஊதிவிடல்

சொல் பொருள் ஊதிவிடல் – தோற்கடித்தல் சொல் பொருள் விளக்கம் பொரிகடலையில் உள்ள உமியை மெல்லென ஊதினாலே பறந்து போய்விடும். நெல்லுமி புடைத்தலால் போகும். மணி பிடியாச் சாவி காற்றில் தூற்றுதலால் போகும். ஊதுதலால்… Read More »ஊதிவிடல்

உள்ளாளி

சொல் பொருள் உள்ளாளி – நோட்டம் பார்ப்பவன், கூட்டுக் கள்வன் சொல் பொருள் விளக்கம் உள்ளாளி மறைவாகவும் துணையாகவும் இருந்து பணி செய்யும் ஆள். அவன் உள்ளாளி எனவும் ஆவான். அவன் செயல் உள்ளாம்.… Read More »உள்ளாளி

உலுப்புதல்

சொல் பொருள் உலுப்புதல் – பறித்துக் கொள்ளல், பலரையும் ஒருங்கு அழித்தல் சொல் பொருள் விளக்கம் மரத்தில் உள்ள காய்களை விழத்தட்டுதல் உலுப்புதல் எனப்படும். உதிர்த்தல் என்பதும் அது. ‘புளியம்பழம் உலுப்புதல்’ என்பது பெருவழக்கு.… Read More »உலுப்புதல்

உலக்கை கொழுந்துவிடல்

சொல் பொருள் உலக்கை கொழுந்துவிடல் – நடவாதது நடத்தல் சொல் பொருள் விளக்கம் உலக்கை உலர்ந்துபோன மரத்தால் செய்யப்படுவது. பட்டையும் பசையும் அற்ற அது தளிர்ப்பது எப்படி? கொழுந்து விடுவதுதான் எப்படி? நடக்கக் கூடியதன்று.… Read More »உலக்கை கொழுந்துவிடல்

உலக்கைக் கழுந்து

சொல் பொருள் உலக்கைக் கழுந்து – கூர்மையில்லாமை சொல் பொருள் விளக்கம் உலக்கைகளுள் கழுந்துலக்கை என்பதொன்று. அது பூண் தேய்ந்ததாகும். மழுங்கிய கூருடைய அது கழுந்து எனப்படும். அதைப் போல் அறிவுக் கூர்மையில்லாத மடவரைக்… Read More »உலக்கைக் கழுந்து

உருவுதல்

சொல் பொருள் உருவுதல் – பறித்தல், தடவல் சொல் பொருள் விளக்கம் ‘மொச்சைக்காய் உருவுதல்’ ஒரு பறிப்பு முறை. ஒவ்வொன்றாக எடுக்காமல் ஒரு கையை மடக்கிக் கூட்டிப் பிடித்துக் கொத்தாகப் பறித்தல் உருவுதலாம். கட்டில்… Read More »உருவுதல்

உருமல்

சொல் பொருள் உருமல் – முணகுதல், வைதல் சொல் பொருள் விளக்கம் உருமுதல் இயற்கையுடையது ‘உருமு’ எனப்படும் இடி. ஆனால் அதனை உருமு என்பதையன்றி உருமல் என்பது இல்லை. உருமல் என்பது நாய் குரைத்தலைச்… Read More »உருமல்

உருட்டுப்புரட்டு

சொல் பொருள் உருட்டுப்புரட்டு – ஏமாற்றுதல் சொல் பொருள் விளக்கம் ஒருபொருளை உருளச் செய்தல் உருட்டு; அதனை நிலை மாறத் திருப்பிப் போடுதல் புரட்டு, உருளை இயல்பாக உருளும். அதனை உருளச் செய்தல் உருட்டு.… Read More »உருட்டுப்புரட்டு

உரித்துக் காட்டல்

சொல் பொருள் உரித்துக் காட்டல் – வெளிப்படப் பேசல் சொல் பொருள் விளக்கம் “ஏனையா மூடிமூடிப் பேசுகிறாய்? உரித்துக் காட்ட வேண்டியது தானே! மானம் இருப்பவனுக்கு அல்லவா மறைத்துப் பேசவேண்டும். இவனை உரித்துக் காட்டினால்… Read More »உரித்துக் காட்டல்

உரித்தல்

சொல் பொருள் உரித்தல் – வைதல் சொல் பொருள் விளக்கம் தோலை உரித்தல் என்பது வழக்கு. அதனால் தோலுக்கு உரி என்றும் உரிவை என்றும் பெயருண்டு. இவ்வுரித்தல் உடையை உரித்தல் என்பதிலும் உண்டு. இவற்றைக்… Read More »உரித்தல்