Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

மைக்குட்டி

சொல் பொருள் கம்பளிப் பூச்சி சொல் பொருள் விளக்கம் குமரி மாவட்டத்தார் கம்பளிப் பூச்சியை மைக்குட்டி என்கின்றனர். கம்பளிப் பூச்சியின் கருவண்ணம் கருதிய பெயர் அது. ஓர் உயிரை மதிக்கும் மதிப்பீடாகக் குட்டி விளங்கி… Read More »மைக்குட்டி

மேலாக்கு

சொல் பொருள் தாவணி காதணிகலங்களுள் மேலாக்கு என்பதும் ஒன்று சொல் பொருள் விளக்கம் பாவாடை கட்டும் சிறுமி மேலே ‘தாவணி’ போடுவது வழக்கம். தாவணி சட்டையின் மேலே போடுவதால் அதனை மேலாக்கு என்பது நெல்லை… Read More »மேலாக்கு

மேசைக்காரர்

சொல் பொருள் அலுவல் அலுவலர் சொல் பொருள் விளக்கம் மிசை என்பது மேல். உயரமான பலகை என்னும் பொருளில் மேசை வழக்குப் பெற்றது. அதனை மேடை என்பார் பாவாணர். நெல்லை மாவட்டத்தில் ‘மேசைக்காரர்’ என்று… Read More »மேசைக்காரர்

மெனக்கி நாள்

சொல் பொருள் விடுமுறை நாள் சொல் பொருள் விளக்கம் வினைக்கேடு என்பது மெனக் கேடு என வழங்கும். வினை மெனை என ஒலிவகை வழுவாகின்றது. வேலை இன்றி இருப்பது வினைக்கேடு. திருச்செந்தூர் வட்டாரத்தார் விடுமுறை… Read More »மெனக்கி நாள்

மெய்யப்பெட்டி

சொல் பொருள் சவப்பெட்டி சொல் பொருள் விளக்கம் அடக்கம் செய்வதற்குச் ‘சவப்பெட்டி’ செய்கின்றனர். சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்வது பெரிதும் கிறித்தவ வழக்கு. இரணியல் வட்டாரத்தார் சவப் பெட்டியை மெய்யப் பெட்டி என்பது அருமை… Read More »மெய்யப்பெட்டி

மெதை

சொல் பொருள் நீரின் நுரை சொல் பொருள் விளக்கம் மிதை என்பது எகரத் திரிபாக மெதை ஆயது. மிதை என்பது மிதந்து வரும் நுரை. நாகர்கோயில் வட்டாரத் தினர் நீரின் நுரையை மெதை என்கின்றனர்.… Read More »மெதை

மூணாரம்

சொல் பொருள் இடுப்பு சொல் பொருள் விளக்கம் இடுப்பு என்பதைக் கருங்குளம் வட்டாரத்தார் மூணாரம் (மூன்று ஆரம்) என வழங்குகின்றனர். எத்தகைய அரிய ஆட்சி என்பது பொருளறிந்தால் புலப்படும். இடுப்பில் உள்ளாடை ஒன்று; மேலாடை… Read More »மூணாரம்

மூடு

சொல் பொருள் குட்டி சொல் பொருள் விளக்கம் மூடு என்பது பழமையான சொல். குட்டி என்னும் பொருள் தரும் சொற்களுள் ஒன்று (தொல், மரபு). அச் சொல் அப் பொருளில் திருச்சி, கருவூர் வட்டார… Read More »மூடு

மூச்செடுப்பு

சொல் பொருள் ஓய்வு சொல் பொருள் விளக்கம் மூச்சு உள்வாங்கல், வெளியிடல் வழியாக மார்பு அளவெடுத்தல் வழக்கம். அம் மூச்செடுப்பு பொதுவழக்கு. கிள்ளியூர் வட்டார வழக்கில் மூச்செடுப்பு என்பது ஓய்வு என்னும் பொருளில் வழங்குகின்றது.… Read More »மூச்செடுப்பு

மூச்சி

சொல் பொருள் நீளப் பொருள் வகிடு சொல் பொருள் விளக்கம் முச்சி என்பது வகிடு. அது அகலம் இல்லாமல் நீண்டு எடுக்கப்படுவது. முச்சி என்பது நீண்டு மூச்சியாகி நீளப் பொருள் தருதல் நாகர்கோயில் வட்டார… Read More »மூச்சி