Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

பிசினி

சொல் பொருள் கருமித் தனம் சொல் பொருள் விளக்கம் பயின் (பிசின்) போல ஒட்டிக் கொண்டு விடாத தன்மை பிசினித் தனமாக நெல்லை வட்டார வழக்காக உள்ளது. ‘பிசினாரி’ என்பதும் அது. கருமித் தனம்… Read More »பிசினி

பிசின்

சொல் பொருள் பழநாளில் பயின் என வழங்கப்பட்ட அரிய சொல் பிசின் என வழுவாக வழங்குகின்றது. பிசின், கோந்து என்றும் பசை என்றும் வழங்கப் படுதலும் உண்டு நெல்லையார் ‘அல்வா’ என்னும் இனிப்புப் பண்டத்தைப்… Read More »பிசின்

பாறை

சொல் பொருள் கெட்டியுள்ள மண், மணல், கல் என்பவற்றை யுடையது குளம் பாறை – தடை,வல்லுள்ளம். சொல் பொருள் விளக்கம் பாறை என்பது கெட்டியுள்ள மண், மணல், கல் என்பவற்றை யுடையது. மட்பாறை, மணற்பாறை,… Read More »பாறை

பாவுள்

சொல் பொருள் நெடிய அகன்ற வீட்டின் உள்ளே பாதுகாப்பாக அமைந்த அறை சொல் பொருள் விளக்கம் நெடிய அகன்ற வீட்டின் உள்ளே பாதுகாப்பாக அமைந்த அறையைப் பாவுள் என்பது பார்ப்பனர் வழக்கு. பரவிய மனையின்… Read More »பாவுள்

பாவி

சொல் பொருள் பாய் – பரவிய அமைப்பினது என்னும் பொருளில் வருவது சொல் பொருள் விளக்கம் பாவி என்பது பொது வழக்கு வசைச் சொல். அழுக்காறு என ஒரு பாவி என வள்ளுவம் வழங்கும்.… Read More »பாவி

பாவாடை

சொல் பொருள் இடை குறுகி விரிந்து பரவிய ஆடை பாவாடை பாகால் செய்யப்பட்ட படையல் கத்தரிக்காயின் காம்பு சூழ்ந்த மேல் தோட்டினைப் பாவாடை என உவமை நயம் சிறக்க வழங்குகின்றனர் சொல் பொருள் விளக்கம்… Read More »பாவாடை

பாலாடை

சொல் பொருள் பாலின்மேல் படியும் ஆடை சங்கு சொல் பொருள் விளக்கம் பாலின்மேல் படியும் ஆடையைப் பாலாடை என்பது பொது வழக்கு. பாலாடை என்பது சங்கு என்னும் பொருளில் கும்பகோண வட்டார வழக்கு உள்ளது.… Read More »பாலாடை

பாம்பேறி

சொல் பொருள் பழனி வட்டாரத்தார் ஆளோடி என்பதைப் பாம்பேறி என்கின்றனர். நெல்லை, முகவை மாவட்டங்களில் பாம்புரி என்பர் சொல் பொருள் விளக்கம் கிணறுகளின் உள்ளே பாறைகண்ட அளவில் ஆள் நடமாட்டம் கொள்ளுமளவு இடம் விட்டுச்… Read More »பாம்பேறி

பாம் பிஞ்சு

சொல் பொருள் பாம் பிஞ்சு – மிகப் பிஞ்சு. சொல் பொருள் விளக்கம் பூம் பிஞ்சு என்பது பொது வழக்கு. பிஞ்சும் பூவும் இணைந்து நிற்கும் நிலை. வெள்ளரிப் பிஞ்சில் பூம்பிஞ்சை விரும்பியுண்பது வழக்கம்.… Read More »பாம் பிஞ்சு

பாந்தம்

சொல் பொருள் அகன்ற குழி, பள்ளம், ஓட்டை, பாத்தி சொல் பொருள் விளக்கம் குழி, பள்ளம், ஓட்டை என்னும் பொருள்களில் குமரி மாவட்ட வட்டார வழக்காகப் பாந்தம் என்னும் சொல் வழங்குகின்றது. பாத்தி என்னும்… Read More »பாந்தம்