Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

பட்டாரியர்

சொல் பொருள் சௌராட்டிரர் (பட்டுநூல்காரர்) சொல் பொருள் விளக்கம் ஆரியர் என்பார் பார்ப்பனர். அவரைப் போல் நூல் அணிந்த சௌராட்டிரர் (பட்டுநூல்காரர்) தம்மைச் சௌராட்டிரா பிராமணர் என்பர். அவரை விளங்கோடு வட்டாரத்தில் பட்டாரியர் என… Read More »பட்டாரியர்

பட்டவாளி

சொல் பொருள் கெட்டிக்காரன் சொல் பொருள் விளக்கம் ஒருவரைப் பாராட்டும் உரையாகப் ‘பட்டவாளி’ என்பது சிவகாசி வட்டார வழக்கு. வில்லாளி, வேலாளி, அறிவாளி என்பவை போலப் பட்ட ஆளி பட்டவாளியாம். பட்டம் பெற்றான் போன்ற… Read More »பட்டவாளி

பட்டசாமி

சொல் பொருள் போரில் இறந்து பட்டோனுக்குக் கல்லெடுத்து வழிபடுதலும் வழக்கம் சொல் பொருள் விளக்கம் போரில் இறந்து பட்டாரைப் பழநாளில் பட்டோன் என்பது வழக்கம். பட்டோனுக்குக் கல்லெடுத்து வழிபடுதலும் வழக்கம். இவ் வழக்கம் மேலூர்… Read More »பட்டசாமி

பசுமை

சொல் பொருள் வெள்ளி சொல் பொருள் விளக்கம் பொற்கொல்லர் வழக்கில் பசுமை என்பது வெள்ளியைக் குறிக்கிறது. நிறத்தால் பொருந்தவில்லை. பசுமை வளமைப் பொருளது. அப் பசுமை வெள்ளிக் காசின் பசுமை (வளமை) குறித்ததாகலாம். குறிப்பு:… Read More »பசுமை

பசளை

சொல் பொருள் பசுந்தாள் உரம் பயிருரம் சொல் பொருள் விளக்கம் பசுந்தாள் உரமே பயிர்க்கு உயிர் உரம் ஆகும். இயற்கை உரமே இயைந்தது எனச் செயற்கை உரம் செய்த அறிவாளிகள் திரும்பி அல்லது திருந்தியுள்ளது… Read More »பசளை

பச்சரி

சொல் பொருள் பச்சரிசி சொல் பொருள் விளக்கம் அரி என்பது பழந்தமிழ் வழக்கு. நெல்லையும், நெல் அரிந்த தாளையும், அரிசியையும் குறிப்பது அது. பச்சரிசி என்னும் பொது வழக்கைப் பச்சரி என விளவங்கோடு வட்டாரத்தில்… Read More »பச்சரி

பகரம்

சொல் பொருள் பதில் சொல் பொருள் விளக்கம் பகரம் என்பது பதில் என்னும் பொருளில் வழங்கும் இலவுவிளை வட்டார வழக்காகும். இவ்வட்டார வழக்குச் சொல்லைப் பாவாணர் எழுத்தில் பொது வழக்குச் சொல்லாகப் பயன்படுத்தினார். வழக்குக்கும்… Read More »பகரம்

பகர்ப்புச் சுருள்

சொல் பொருள் உண்மைப்படி, நகல் சொல் பொருள் விளக்கம் மூலப்படி எழுத்தினைப் படியெடுப்பதை பகர்ப்புச் சுருள் என்பது குமரி மாவட்ட வழக்கு. உண்மைப்படி, நகல் என்னும் பொது வழக்கு மற்றை இடங்களில் வழங்கும். பகர்ப்பு… Read More »பகர்ப்புச் சுருள்

பக்கப்பயறு

சொல் பொருள் பாசிப்பயறு சொல் பொருள் விளக்கம் பாசிப்பயறு என்பது பச்சைப் பயறு ஆகும். பச்சை பாசியாகும். பச்சைப் பாசி என மணிப் பெயர் உண்டு. கிணற்றில் குளத்தில் உள்ள பாசி பசுமை என்பதை… Read More »பக்கப்பயறு

பக்கப் பயிர்

சொல் பொருள் ஊடுபயிர் சொல் பொருள் விளக்கம் விதைக்கப்பட்ட பயிரின் ஊடுபயிராக ஊன்றப்பட்ட பயிரைப் பக்கப்பயிர் என்பது சங்கரன்கோயில் வட்டார வழக்கு. ஊடுபயிர் என்பது பொது வழக்கு. ஒரு பயிரின் ஊடுபயிராக மூன்று நான்கு… Read More »பக்கப் பயிர்