Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

காண்டு

சொல் பொருள் நல்லதைக் கண்டோ, பிறர் வாழ்வு கண்டோ பொறாமைப் படுபவனைக் காண்டு என்பது மதுரை வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் நல்லதைக் கண்டோ, பிறர் வாழ்வு கண்டோ பொறாமைப் படுபவனைக் காண்டு… Read More »காண்டு

காசலை

சொல் பொருள் காசின்மேல் உள்ள பற்றால் அலையாக அலைந்து தேடுவது போன்ற அக்கறை இதுவாம் சொல் பொருள் விளக்கம் காசலை = அக்கறை. “இன்றைக்கு என்னவோ காசலையா வந்து பேசுகிறான்; நேற்றெல்லாம் கண் தெரியவில்லை”… Read More »காசலை

காக்கல்

சொல் பொருள் குழம்பு காய்கறி மிகுந்த காரமாக இருந்தால் காக்கலாக இருக்கிறது என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு ஆகும் சொல் பொருள் விளக்கம் குழம்பு காய்கறி மிகுந்த காரமாக இருந்தால் காக்கலாக இருக்கிறது என்பது… Read More »காக்கல்

கனைத்தான்

சொல் பொருள் சிலபேர் அப்படி இப்படி எனச் சொல்வர்; ஆனால் எதுவும் செய்யார். அத்தகைய சொல்வீரனைக் “கனைத்தான்” போ! எனல் நெல்லை வழக்கு சொல் பொருள் விளக்கம் கனைத்தல் = கத்துதல். சிலபேர் அப்படி… Read More »கனைத்தான்

கன்னியாப் பெண்

சொல் பொருள் என்றும் மகப்பேறு அடையாத கன்னியாகவே இருப்பவள். சொல் பொருள் விளக்கம் கன்னியாள் ஆகிய பெண் இவ்வாறு பேச்சில் வழங்குகின்றது. என்றும் மகப்பேறு அடையாத கன்னியாகவே இருப்பவள். அவள் பூப்பும் அடையமாட்டாள். இவ்வழக்கு… Read More »கன்னியாப் பெண்

கன்னக் கிடாரி

சொல் பொருள் ஈனாக் கிடாரியைக் கன்னக் கிடாரி என்பது அரூர் வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் கிடாரி என்பது மாட்டில் பெண்; பசு, எருமை ஆகியவற்றின் பெண்பால் கிடாரி எனப்படும். ஆண்பால்… Read More »கன்னக் கிடாரி

கன்றுத் தோட்டம்

சொல் பொருள் ஏலத்தோட்ட வழக்காக ஏலப் பயிர் உண்டாக்கும் இடத்தைக் கன்றுத் தோட்டம் என்று வழங்குகின்றனர் சொல் பொருள் விளக்கம் ‘நர்சரி’ எனப் பல இடங்களில் பூச்செடி, பழச்செடி ஆகியவை உண்டாக்கி விற்கப்படுகின்றன. ஏலத்தோட்ட… Read More »கன்றுத் தோட்டம்

கறுப்பு

சொல் பொருள் சாராயம் என்பது மதி மருள – இருள – ச்செய்வதால் அதனைக் கறுப்பு என்பது வில்லுக்கிரி வட்டார வழக்காக உள்ளது கறுப்பு (கருப்பு) – பேய் சொல் பொருள் விளக்கம் கறுப்பு… Read More »கறுப்பு

கறிச்சை

சொல் பொருள் கறிச்சை என்பது வண்டு என்னும் பொருளில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் கறங்கு என்பது, சுற்றுதல் என்னும் பொருளில் விளவங்கோடு வட்டாரவழக்குச் சொல்லாக இருப்பதால், அப்பொருள் அடியாகவே கறிச்சை என்பது வண்டு… Read More »கறிச்சை

கறிக்காலி

சொல் பொருள் ஊன் தேவை கருதி வளர்க்கப்படும் ஆட்டைக் கறிக்காலி என்பது ஒட்டன் சத்திர வட்டாரவழக்கு சொல் பொருள் விளக்கம் கால் நடையைக் காலி என்பது பொது வழக்கு. ஊர் காலி மாடு, கன்று… Read More »கறிக்காலி