Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

கரண்டகம்

சொல் பொருள் நீர்க்கெண்டி கரண்டகம் எனப்படும். சுண்ணாம்புக் கூட்டைக் கரண்டகம் என்பது பிற்கால இலக்கிய வழக்கு சொல் பொருள் விளக்கம் நீர்க்கெண்டி கரண்டகம் எனப்படும். கரகம் என்பது பழ வழக்கு. கமண்டலம், கமண்டலு என்பவை… Read More »கரண்டகம்

கமுக்கல்

சொல் பொருள் மூங்கில் என்னும் புல்லினத்தைக் கமுக்கல் என்பது அகத்தீசுவர வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் மூங்கில் என்னும் புல்லினத்தைக் கமுக்கல் என்பது அகத்தீசுவர வட்டார வழக்கு. அதுகாற்றுக்கு இயல்பாக வளைந்து நிமிர்தலால்… Read More »கமுக்கல்

கமுக்கம்

சொல் பொருள் வெளியிடக் கூடாத செய்தியைக் கமுக்கம் என்பது தென்னக வழக்கு கமுக்கம் – வெளிப்படுத்தாமை சொல் பொருள் விளக்கம் வெளியிடக் கூடாத செய்தியைக் கமுக்கம் என்பது தென்னக வழக்கு. கமுக்கக் கூடு (கம்புக்கூடு)… Read More »கமுக்கம்

கமலுதல்

சொல் பொருள் ‘கமலை’ என்பது ஒலித்தல் பொருளில் வரும் இறைவைத் தொழிற்பெயராகும் சொல் பொருள் விளக்கம் ஒலித்தல் என்னும் பொருளில் பாலமேட்டுப் பகுதியில் வழங்குகின்றது. அமலுதல், ஞமலுதல் கஞலுதல் போலக் கமலுதல் ஒலித்தல் பொருளில்… Read More »கமலுதல்

கம்புக் கிழங்கு

சொல் பொருள் குச்சிக் கிழங்கு, கப்பக்கிழங்கு என்பதைக் கம்புக் கிழங்கு என்பது நாகர்கோயில் வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் குச்சிக் கிழங்கு, கப்பக்கிழங்கு என்பதைக் கம்புக் கிழங்கு என்பது நாகர்கோயில் வட்டார வழக்காகும்.… Read More »கம்புக் கிழங்கு

கமத்தல்

சொல் பொருள் துணிகளை நனைத்தலைக் கமத்தல் என்பது சலவைத் தொழில் வழக்கு சொல் பொருள் விளக்கம் துணிகளை நனைத்தலைக் கமத்தல் என்பது சலவைத் தொழில் வழக்கு. இது மதுரை மாவட்டம் ‘பாலமேடு’ வட்டார வழக்காகும்.… Read More »கமத்தல்

கம்பக் கட்டு

சொல் பொருள் கம்பில் கட்டிவிடுகின்ற வாணவெடி கம்பக் கட்டு சொல் பொருள் விளக்கம் கம்பில் கட்டிவிடுகின்ற வாணவெடியைக் கம்புக்கட்டு என்று நாகர்கோயில் வட்டாரத்திலும், கம்பத்தில் (பெரிய கம்பு) கட்டி விடுவதால் கம்பக்கட்டு என்று குமரி… Read More »கம்பக் கட்டு

கதிரை

சொல் பொருள் அறுகாலியைக் கதிரை என்பது யாழ்ப்பாண வழக்கும், தமிழகப் பரதவர் வழக்குமாகும் சொல் பொருள் விளக்கம் நான்கு காலுடையதை நாற்காலி என்பது போல் ஆறுகால் உடைய இருக்கைப் பலகையை அறுகாலி என்றார் பாவாணர்.… Read More »கதிரை

கதம்பை

சொல் பொருள் தேங்காயின் மேல் அதன் பாதுகாப்புப் போல் நாரும், மட்டையும் உள்ளன. அவற்றில் நாரைக் கதம்பை என வழங்குதல் நாஞ்சில் நாட்டு வழக்கமாகும். சொல் பொருள் விளக்கம் தேங்காயின் மேல் அதன் பாதுகாப்புப்… Read More »கதம்பை

கத்து

சொல் பொருள் குமரி மாவட்ட வழக்கில் கத்து, கடிதம் என்னும் பொருளில் வழங்குகின்றது. சொல் பொருள் விளக்கம் கற்றவர் எழுதுவதும், கற்றவர் படிப்பதும் உள்ளமையால் கடிதத்தைக் கற்று என்று வழங்கி, அது கத்து ஆகியிருக்கலாம்.… Read More »கத்து