Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

கணிசம்

சொல் பொருள் கண்ணால் அளந்து தரும் அளவு கணிசம் ஆகும் சொல் பொருள் விளக்கம் அளந்து கொடுக்காமல் கண்ணால் அளவிட்டுத் தருவதைக் கணிசம் என்பர். இதற்கு ஏன் அளந்து கொண்டு; ஒரு கணிசமாகக் கொடுங்கள்… Read More »கணிசம்

கண்ணுக்கடி

சொல் பொருள் பொறாமையால் பார்க்கும் பார்வையைக் கண்ணுக் கடி என்பது அகத்தீசுவர வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் பாம்பு கடித்தல், தேள்கடித்தல் என்பவை பாம்பு தீண்டுதல், தேள் கொட்டுதல் எனப்படும். கண்ணால் கடிப்பதுண்டா?… Read More »கண்ணுக்கடி

கண்ணமுது

சொல் பொருள் ஆழ்வார்கள் வழக்கில் கண்ணமுது என்பது பாயசக் குறிப்பினது சொல் பொருள் விளக்கம் பாயசம் என்பது ‘கன்னலமுது’ ஆகும். கன்னல் கரும்பு இனிப்பு. ஆழ்வார்கள் வழக்கில் கண்ணமுது என்பது பாயசக் குறிப்பினது. பெருமாள்… Read More »கண்ணமுது

கண்ணப்பச்சி

சொல் பொருள் இக்கண்ணப்பச்சி என்பது அப்பாவின் அப்பா ஆகிய தாத்தாவைக் குறிப்பதாகவும் சொல் பொருள் விளக்கம் அப்பச்சி என்பது அம்மை அப்பன் ஆகிய இருவரையும் குறிப்பதாக இருந்து பின்னர் அப்பனை மட்டும் குறித்து வழங்குவதாயிற்று.… Read More »கண்ணப்பச்சி

கண்டு

சொல் பொருள் விளையாட்டுகளில் ஒன்று ஒளிந்து விளையாடல். கண்டுபிடித்தல் என்னாது கண்டு என்று அதனைக் கூறுவது குமரி மாவட்ட வாத்தியார் விளை வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் உருட்டித் திரட்டப்படுவதைக் கண்டு என்பது… Read More »கண்டு

கடைக் கட்டில்

சொல் பொருள் பாடையைக் கடைக் கட்டில் என்பது திருச்செங்கோடு வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் வாழ்வின் முடிவில் கடைசியாகப் படுக்க வைக்கும் கட்டில் பாடை ஆகும். பாடையைக் கடைக் கட்டில் என்பது திருச்செங்கோடு… Read More »கடைக் கட்டில்

கடுப்பான்

சொல் பொருள் உறைப்பு தூக்குதலாக இருக்கும் துவையல். அக் கடுமை கருதிக் கடுப்பான் என்பது ஒட்டன்சத்திர வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் தயிர்மோர் விட்டு உண்பதற்கு ஊறுகாய் போன்ற மற்றொன்று துவையல் ஆகும்.… Read More »கடுப்பான்

கடுக்காய்

கடுக்காய்

1. சொல் பொருள் (பெ) கடுக்காய் மரம்; விரலால் பதிக்க முடியாவாறு கெட்டிப்பட்ட நுங்கைக் கடுக்காய் என்பது நெல்லை வழக்கு 2. சொல் பொருள் விளக்கம் விரலால் குடைந்து எடுத்தலும், அதனை உண்ணலும் நுங்குதல்… Read More »கடுக்காய்

கடுக்கன்

சொல் பொருள் ஆண்கள் காதில் அணிவதுமாம் அணிகலம் கடுக்கன் எனப்படுதல் நெல்லை வழக்கு சொல் பொருள் விளக்கம் கடுக்கை என்பது கொன்றை. அதன் பூப் போன்றதும் ஆண்கள் காதில் அணிவதுமாம் அணிகலம் கடுக்கன் எனப்படுதல்… Read More »கடுக்கன்

கடிப்பு

சொல் பொருள் இரு முனைகளும் கௌவிப் பிடிக்கும் இடுக்கி என்னும் கருவியைக் கடிப்பான் என்பது மதுரை, நெல்லை மாவட்ட வழக்காகும் சொல் பொருள் விளக்கம் கடிப்பதும், கடித்துத் தின்னும் பொருளும் கடிப்பு எனப்படும். கருப்புக்… Read More »கடிப்பு