Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

கடிப்பான்

சொல் பொருள் முகட்டுப்பூச்சி எனப்படும் மூட்டைப் பூச்சியைக் கடிப்பான் என்பது இராசபாளைய வட்டார வழக்கு கூழுக்குத் தொடுகறியைக் கடிப்பான் என்பது நெல்லை வழக்கு சொல் பொருள் விளக்கம் முகட்டுப்பூச்சி எனப்படும் மூட்டைப் பூச்சியைக் கடிப்பான்… Read More »கடிப்பான்

கடம்பால்

சொல் பொருள் செறிவுடைய அல்லது கெட்டியான சீம்பாலைக் கடம்பால் என்பது விருதுநகர் வட்டாரவழக்கு சொல் பொருள் விளக்கம் கடம் என்பது காடு, செறிவு என்னும் பொருளது. எ-டு: “கடமா தொலைச்சிய கானுறை வேங்கை” “தலை… Read More »கடம்பால்

கடகால்

சொல் பொருள் கிணற்றில் நீர் சேந்தும் வாளியைக் குறிப்பதாகக் கடகால் என்னும் பெயரில் முகவை, நெல்லை மாவட்ட வழக்குகளில் உள்ளது சொல் பொருள் விளக்கம் நீர் ஏறா மேட்டுக்கு நீர் ஏற்ற ‘இறைபெட்டி’ போட்டு… Read More »கடகால்

கட்டைக் காலன்

சொல் பொருள் கட்டைக்காலன் என்பதற்குப் பன்றி என்னும் பொருள் முகவை மாவட்ட வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் கட்டை > குட்டை = உயரக் குறைவு. கட்டைக்காலன் என்பது கால் உயரம் குறைந்தவனைக்… Read More »கட்டைக் காலன்

கட்டை

சொல் பொருள் உடல் சொல் பொருள் விளக்கம் மரத்துண்டம், குட்டை என்பவற்றைக் குறிக்கும் கட்டை, பொதுவழக்குப் பொருளது. ஆனால் அது துறவர் வழக்கில் உடலைக் குறித்து வழங்கியது. “இந்தக் கட்டைக்கு இனி என்ன வேண்டும்?… Read More »கட்டை

கட்டு சீலை

சொல் பொருள் கோவணத்தைக் கட்டு சீலை என்பது விளவங்கோடு வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் குளிசீலை என்பதும் தாய்ச்சீலை என்பதும் கோவணப் பொருளன. சீலை (சீரை) யில் இருந்து (கிழிந்த சீலையில் இருந்து)… Read More »கட்டு சீலை

கட்டுக்கணி

1. சொல் பொருள் இயற்கையான முடி இல்லாதவர் செயற்கையாக முடி செய்து கட்டுதல் உண்டு. அச் செயற்கை முடியைக் கட்டுக்கணி என்பது கொங்கு நாட்டு வழக்கு 2. சொல் பொருள் விளக்கம் இயற்கையான முடி… Read More »கட்டுக்கணி

கட்டான்

சொல் பொருள் எலும்பைக் கட்டான் என்பது மதுரை வழக்கு. சொல் பொருள் விளக்கம் நரம்பு நார் ஆகியவற்றால் கட்டப்பட்டது உடல். ஆதலால் யாக்கை (ஆக்கை) எனவழங்கும். யாத்தல், யாப்பு என்பவை கட்டு என்னும் பொருளன.… Read More »கட்டான்

கட்டாப்பு

சொல் பொருள் தோட்டம், தோப்பு, பயிர்நிலம் ஆகியவற்றில் ஆடு மாடு புகாமல் இட்டுக் கட்டப்படும் வேலி, அல்லது நெருக்கமாக அமைந்த உயிர் வேலி ‘கட்டாப்பு’ என வழங்கப்படுதல் கண்டமனுர் வட்டார வழக்காகும் சொல் பொருள்… Read More »கட்டாப்பு

கட்டாடி

சொல் பொருள் கட்டி எடுத்துச் சென்று துணிகளை அடித்து வெளுக்கும் சலவையரைக் கட்டாடி என்பது யாழ்ப்பாண வழக்கு சொல் பொருள் விளக்கம் கட்டி எடுத்துச் சென்று துணிகளை அடித்து வெளுக்கும் சலவையரைக் கட்டாடி என்பது… Read More »கட்டாடி