Skip to content

க வரிசைச் சொற்கள்

க வரிசைச் சொற்கள், க வரிசைத் தமிழ்ச் சொற்கள், க என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், க என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

கண்ணடித்தல்

சொல் பொருள் கண்ணடித்தல் – காதல் குறிப்புக் காட்டல் சொல் பொருள் விளக்கம் இது பெரும்பாலும் காதலன் காதலிக்கு உரைக்கும் குறிப்புரையாகும். உள்ளத்து உணர்வு முகத்தில் முதிரும்; முகத்தின் முதிர்வு கண்னில் தெரியும்; அக்கண்ணின்… Read More »கண்ணடித்தல்

கண்ணசைத்தல்

சொல் பொருள் கண்ணசைத்தல் – குறிப்புக் காட்டல் சொல் பொருள் விளக்கம் கண்ணசைத்தல் என்பது, அசைப்பைக் குறிக்காமல் வேறோர் உட்பொருளைக் குறித்துக் காட்டலேயாம். ‘கண் சாடை காட்டுதல்’ என வழக்கில் உள்ளது இக்கண்ணசைப்பாம். காரிகையார்… Read More »கண்ணசைத்தல்

கடைந்தெடுத்தல்

சொல் பொருள் கடைந்தெடுத்தல் – அகவையை மீறிய அறிவு சொல் பொருள் விளக்கம் தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்ததிலிருந்து வந்த வழக்குச்சொல் இது. பாலின் அளவு காயவைக்கும் பொழுது சுண்டும். அதன்பின் பிரையிட்டுத் தயிராக்கிக்… Read More »கடைந்தெடுத்தல்

கடைகோடி

சொல் பொருள் கடைகோடி – ஆகக் கடைசி சொல் பொருள் விளக்கம் கடை என்பது கடைசி என்னும் பொருளது, கோடி என்பது கடைசி என்னும் எண்ணுப் பெயர். அது ‘தெருக்கோடி’ தெற்குக் கோடி என… Read More »கடைகோடி

கடுவாய் நோட்டு – நூறு உரூபாத்தாள்

சொல் பொருள் கடுவாய் நோட்டு – நூறு உரூபாத்தாள் சொல் பொருள் விளக்கம் கடுவாய் என்பது பெரும்புலி! பதினாறு அடி தாவும் வேங்கையைக் கடுவாய் என்பர். அதன் பிளந்த பெருவாயையும் அதன் கொடுங்காட்சியையும் கண்டு… Read More »கடுவாய் நோட்டு – நூறு உரூபாத்தாள்

கடித்தல்

சொல் பொருள் கடித்தல் – சண்டையிடல் சொல் பொருள் விளக்கம் நாய் பூனை முதலியவை ஒன்றையொன்று பகைத்தால் கடிப்பாலேயே தம் பகையைத் தீர்க்கும். கடித்தல் அவற்றின் சண்டைக்கு அறிகுறி. ஆனால் அந்நாயும் பூனையும் நட்பாக… Read More »கடித்தல்

கட்டுப்படுதல்

சொல் பொருள் கட்டுப்படுதல் – கட்டளைக்கு உட்படுதல் சொல் பொருள் விளக்கம் பெற்றவர்கள் பெரியவர்கள் என்பதால் அவர்கல சொல்வது மனத்திற்கு ஒவ்வவில்லை எனினும் ஒருவாறு ஏற்றுக் கொண்டு நடப்பதுண்டு. அதற்குக் கட்டுப்படுதல் என்பது பெயர்.… Read More »கட்டுப்படுதல்

கட்டிப்போடுதல்

சொல் பொருள் கட்டிப்போடுதல் – அடங்கச் செய்தல் சொல் பொருள் விளக்கம் கயிற்றால் கட்டுதல்தான் கட்டுதல் என்பது இல்லை. சொல்லால் கட்டுதலும் கட்டே. கட்டளை, கட்டுரை, கட்டுப்பாடு, கட்டுப்படுத்தல், கட்டுமானம் என்பனவெல்லாம் கயிற்றொடு தொடர்பில்லாக்… Read More »கட்டிப்போடுதல்

கட்டிக் கொள்ளல்

சொல் பொருள் கட்டிக் கொள்ளல் – திருமணம் செய்தல் சொல் பொருள் விளக்கம் திருமணம் செய்தலைத் ‘தாலிகட்டு’ என்பது வழக்கம். திருமண நிகழ்வில் கட்டாயம் இடம்பெறுவது, தாலிகட்டு முடிந்துவிட்டால் திருமண விழா முடிந்தது எனப்… Read More »கட்டிக் கொள்ளல்

கட்டிக் கொடுத்த சோறு

சொல் பொருள் கட்டிக் கொடுத்த சோறு – கற்றுக்கொடுத்த கல்வி சொல் பொருள் விளக்கம் கட்டிக் கொடுத்த சோற்றின் அளவு மிகுமா? சுவைதான் மிகுமா? தந்த அளவே அளவாய் அமையும். அதுபோல், கற்றுக் கொடுத்த… Read More »கட்டிக் கொடுத்த சோறு