Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

தலையாட்டிப் பிழைப்பு

சொல் பொருள் தலையாட்டிப் பிழைப்பு – ‘ஆமாம்’ ‘ஆமாம்’ என்று சொல்லிப் பிழைத்தல் சொல் பொருள் விளக்கம் தன்னலம் நாடும் ஒருவன் எவர் என்ன சொன்னாலும் “ஆமாம் ஆமாம்” என்று சொல்வதை அன்றி மறுப்பதே… Read More »தலையாட்டிப் பிழைப்பு

தலை முழுகல்

சொல் பொருள் தலை முழுகல் – தீர்த்துவிடல், ஒழித்துவிடல் சொல் பொருள் விளக்கம் சிக்கு அழுக்கு ஆகியவற்றைப் போக்க தலை முழுகுதல் தமிழர் வழக்கம். ‘எண்ணெய் தேய்த்துச் சீயக்காய் தேய்த்து நீராடல் வாரத்திற்கு ஒரு… Read More »தலை முழுகல்

தலைதடவல்

சொல் பொருள் தலைதடவல் – சுரண்டுதல், முழுவதும் பறித்தல் சொல் பொருள் விளக்கம் தலையில் ஈரும் பேனும் சேர்ந்துவிட்டாலும் அழுக்குப் பிடித்து விட்டாலும் தலையைச் சொறிய அல்லது சுரண்டநேரும். கையால் தலையைத் தடவுவதுடன் விரல்களால்… Read More »தலைதடவல்

தலைகாட்டாமை

சொல் பொருள் தலைகாட்டாமை – முன்வராமை சொல் பொருள் விளக்கம் தலை என்பது உறுப்பைக் குறியாமல், உறுப்புடையானைக் குறிப்பதாம். தலைக்கு இரண்டு என்றால் ஆளுக்கு இரண்டு என்பது போன்ற வழக்கு உடையதாகும் இது. பல… Read More »தலைகாட்டாமை

தலைகவிழ்தல்

சொல் பொருள் தலைகவிழ்தல் – இழிவுறுதல் சொல் பொருள் விளக்கம் ஒருவர் செய்த பிழையைச் சுட்டிக்காட்டும்போது, சுட்டப் பட்டவர் மானியாக இருப்பின் அவர் தலைகவிழ்தல் இயற்கை. தலைகவிழ்தல் என்பது இதனால் இழிவுப் பொருள் தருவதாயிற்று.… Read More »தலைகவிழ்தல்

தலைக்கட்டு

சொல் பொருள் தலைக்கட்டு – குடும்பம் சொல் பொருள் விளக்கம் தலை என்பது ஆள் என்னும் பொருளது. தலையை எண்ணுதல் ஆளை எண்ணுதலாம். தலைகட்டுக்குத் தக்க கோயில்வரி, ஊர்வரி, வாங்குதல் இன்றும் நடைமுறை. ஒரு… Read More »தலைக்கட்டு

தலைக்கட்டல்

சொல் பொருள் தலைக்கட்டல் – சீர் செய்தல், சரி செய்தல் சொல் பொருள் விளக்கம் தலைக்கட்டல் என்பது தலையைக் கட்டுதல் என்னும் பொருளைக் குறியாமல் சீர் செய்தல், சரி செய்தல் என்னும் பொருளில் வருவது… Read More »தலைக்கட்டல்

தமுக்கடித்தல்

சொல் பொருள் தமுக்கடித்தல் – பலரறியச் சொல்லல் சொல் பொருள் விளக்கம் ஊர் சாற்றுதல் என்பது இன்னும் வழக்கில் உள்ளது கையில் தமுக்கு என்னும் ஒருபக்கப் பறை வைத்துக்கொண்டு அடித்து இடை இடையே நிறுத்தி… Read More »தமுக்கடித்தல்

தந்தனாப்பாடல்

சொல் பொருள் தந்தனாப்பாடல் – வறுமைப்படல் சொல் பொருள் விளக்கம் துந்தனாப் பாடல் என்பதும் இப்பொருள் தருவதே. பிச்சைக்கு வருபவர் பாட்டுப்பாடிக்கொண்டும் ஆடிக் கொண்டும் வருதல் வழக்கமாதலின் ‘பாட்டுப்பாடுதல்’ என்னும் பொருளில் தந்தனாப் பாடுதல்,… Read More »தந்தனாப்பாடல்

தண்ணீர் காட்டுதல்

சொல் பொருள் தண்ணீர் காட்டுதல் – தப்பிவிடுதல் சொல் பொருள் விளக்கம் “ஒரு கொள்ளைக்கூட்டம் கட்டுப்பாடான அந்த ஊர்க்குத் தண்ணீர் காட்டியிருக்கிறது” உனக்கு ஒரு நாள் தண்ணீர் காட்டாமலா விடுவான்; அப்பொழுது உண்மை புரியும்”… Read More »தண்ணீர் காட்டுதல்