Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

என்னங்க

சொல் பொருள் என்னங்க – கணவர் சொல் பொருள் விளக்கம் “என்ன அவர்களே” என்பது முடிந்த அளவும் தேய்ந்து ‘என்னங்க’ என வழங்குகின்றது. “அவர்கள்- அவன்கள்- அவங்க” எனமாறும். என்னங்க என்பது, பெரியவர்களை மதித்து… Read More »என்னங்க

எலியும் பூனையும்

சொல் பொருள் எலியும் பூனையும் – பகை சொல் பொருள் விளக்கம் எலியும் பூனையும் பகையானவை. பூனையைப் பெரிதும் வளர்ப்பதே, எலித் தொல்லையை ஒழிப்பதற்கே. ஆகலின் இரையாம் எலியைப் பூனை பற்றுதல் அதன் இயற்கைத்… Read More »எலியும் பூனையும்

எடைபோடுதல்

சொல் பொருள் எடைபோடுதல் – மதிப்பிடுதல் சொல் பொருள் விளக்கம் எடுத்தல் என்பது நிறுத்தல், எடுத்தலளவை, அறிக. நிறுக்க வேண்டுமானால் தூக்குதல் வேண்டும். ஆதலால் தூக்குதலும் ஆராய்தல் பொருள் தருவதாயிற்று. எடை போடுதலில் ‘இவ்வளவு’… Read More »எடைபோடுதல்

எடுத்துவிடல்

சொல் பொருள் எடுத்துவிடல் – புனைந்து கூறுதல் சொல் பொருள் விளக்கம் உள்ளதை உள்ளபடி கூறாமல் இட்டுக்கட்டியும் பொய்யும் புளுகும் புனைந்தும் கூறுவது சிலர்க்கு மாறா இயற்கையாக இருப்பது உண்டு. அத்தகையவர், அவ்வாறு சொல்வதில்… Read More »எடுத்துவிடல்

எடுத்துவிட்டுக் குரைத்தல்

சொல் பொருள் எடுத்துவிட்டுக் குரைத்தல் – தூண்டித் தூண்டிச் செய்தல் சொல் பொருள் விளக்கம் நாய்க்கு இயற்கை குரைப்பு. புதுவதாகத் தெரியும் காட்சியும், புதுவதாகக் கேட்கும் ஒலியும் நாயை எழுப்பிவிட்டுக் குரைக்க வைக்கும். இனத்தைக்… Read More »எடுத்துவிட்டுக் குரைத்தல்

எடுத்தேறி

சொல் பொருள் எடுத்தேறி – தனியே முயன்று செய்ய வேண்டிய வேலை சொல் பொருள் விளக்கம் ஒட்டி ஒட்டி நிலம் இருந்தால் வேலை செய்தல், காவல் கண்காணிப்பு ஆகியவற்றுக்கு வாய்ப்பாக இருக்கும். ஒரு நிலத்திற்கும்… Read More »எடுத்தேறி

எடுத்தாட்டல்

சொல் பொருள் எடுத்தாட்டல் – பிறருக்குரியதை முன்னின்று செய்தல் சொல் பொருள் விளக்கம் நம்மால் என்ன செய்ய முடியும் எனச் சில செய்திகளைச் சிலர் கைவிட்டுவிடுவர். அவர்க்கு வேண்டியவர் அல்லது வேண்டியவராக முன் வருபவர்.… Read More »எடுத்தாட்டல்

ஊமைக் குறும்பு

சொல் பொருள் ஊமைக் குறும்பு – வெளியே தெரியாமல் குறும்பு செய்தல் சொல் பொருள் விளக்கம் சிலர் தோற்றத்தால் மிக ஊமையாக இருப்பர். ஆனால் ஓயாது பேசித்திரிவர். செய்யாத குறும்புகளையும் செய்து விடுவர். அத்தகையவரையே… Read More »ஊமைக் குறும்பு

ஊம் போடல்

சொல் பொருள் ஊம் போடல் – ஒப்பிக்கேட்டல் சொல் பொருள் விளக்கம் ஒருவர் ஒரு செய்தியை அல்லது கதையைச் சொல்லும் போது அதனைக் கேட்டுக் கொண்டு வருவதற்கு அடையாளமாக வாயால் ‘ஊம்’ கொட்டல் வழக்கம்.… Read More »ஊம் போடல்

ஊதுதல்

சொல் பொருள் ஊதுதல் – பருத்தல் சொல் பொருள் விளக்கம் ‘முன்னைக்கு இப்பொழுது ஊதீவிட்டார்’ என்பதும் ‘ஆளைக் கண்டு மயங்காதே ஊது காமாலை’ என்பதும் வழக்கும் பழமொழியுமாம். ஊதுதல் காற்றடைத்தல் காற்றடைக்கப்பட்ட தேய்வை (இரப்பர்)ப்… Read More »ஊதுதல்