Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

தொடங்கட்டுதல்

சொல் பொருள் தொடங்கும் வேளையில் தடையாதல் என்னும் பொருளது இது சொல் பொருள் விளக்கம் புறப்பட்டு ஒருவர் செல்லும் போது குழந்தையோ பிறர் ஒருவரோ உடன் தாமும் வருவதாகப் புறப்படுதல் தொடங்கட்டுதல் என்பது திண்டுக்கல்… Read More »தொடங்கட்டுதல்

தொட்டி

சொல் பொருள் தொட்டி = தோண்டப்பட்ட பள்ளம், பள்ளம் போன்ற நீர்த் தொட்டி சொல் பொருள் விளக்கம் தொடுதல் = தோண்டுதல். தொட்டி = தோண்டப்பட்ட பள்ளம், பள்ளம் போன்ற நீர்த் தொட்டி. “தொட்டிப்… Read More »தொட்டி

தொட்டப் பாட்டு

சொல் பொருள் தொட்டில் கட்டுதலைத் ‘தொடுத்தல்’ என்பர். தொட்டிலில் குழந்தையை இட்டுப் பாடும் தாலாட்டுப் பாடலை, ஒட்டன் சத்திர வட்டாரத்தார் தொட்டப்பாட்டு என்பர். சொல் பொருள் விளக்கம் தொட்டில் கட்டுதலைத் ‘தொடுத்தல்’ என்பர். தொட்டிலில்… Read More »தொட்டப் பாட்டு

தொட்டப்பா

சொல் பொருள் அப்பாவாகிய தந்தைக்குப்பின் அறிவுத் தந்தையாக (ஞானத் தந்தையாக) விளங்கும் கிறித்தவக் குருவராம் தந்தையைத் தொட்டப்பா என்பது நெல்லைக் கிறித்தவர் வழக்காகும் சொல் பொருள் விளக்கம் அப்பாவாகிய தந்தைக்குப்பின் அறிவுத் தந்தையாக (ஞானத்… Read More »தொட்டப்பா

தொஞ்சை

சொல் பொருள் துரட்டி (தோட்டி) எனப்படும் தொடுவைக் கம்பைத் தொஞ்சை என்பது திருப்பரங்குன்ற வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் தொய்தல் = வளைதல். தொய்வு = வளைவு. துரட்டி (தோட்டி) எனப்படும் தொடுவைக்… Read More »தொஞ்சை

தொக்கு

சொல் பொருள் கேழ்வரகு கூழ்மாவைத் தொக்கு என்பது கம்பம் வட்டார வழக்கு. இளைத்தவனா என்னும் பொருளது இரண்டு மூன்று பொருள்களைக் கலந்து அரைக்கும் துவையலைத் தொக்கு என்பது தென்னக வழக்கு சொல் பொருள் விளக்கம்… Read More »தொக்கு

தைப்பாறுதல்

சொல் பொருள் இளைப்பு ஆறுதல், தகைப்பு ஆறுதல் என்பவை தைப்பாறுதல் எனப்படும் சொல் பொருள் விளக்கம் இளைப்பு ஆறுதல், தகைப்பு ஆறுதல் என்பவை தைப்பாறுதல் எனப்படும். களைப்பு ஆறுதல், ‘களை ஆறுதல்’ என்று வழங்குதல்… Read More »தைப்பாறுதல்

தேரி

சொல் பொருள் காற்று மோதியடித்தலால் கடற்கரைப் பகுதியில் உள்ள மணல் மேடுபட்டு மலைபோல் உயர்ந்து தோற்றம் தரும். அது தேரி எனப்படும். சொல் பொருள் விளக்கம் காற்று மோதியடித்தலால் கடற்கரைப் பகுதியில் உள்ள மணல்… Read More »தேரி

தேசிக்காய்

சொல் பொருள் தேசிக்காய் என இலாமிச்சைக் காயை வழங்குதல் இலந்தைக்குள வட்டார வழக்காகும். சொல் பொருள் விளக்கம் தேசி என்பது தேசத்தான் தேசத்தது என்னும் பொருளது. இலாமிச்சை எனப்படும் எலுமிச்சை வெளிநாட்டில் இருந்து இங்கு… Read More »தேசிக்காய்

தேக்குதல்

சொல் பொருள் ஒருவரை ஏதேனும் ஒரு வகையால் வராமலோ செல்லாமலோ தடுத்து நிறுத்துதலைத் தேக்குதல் என்பது பெட்டைவாய்த்தலை வட்டார வழக்காகும். சொல் பொருள் விளக்கம் நீரைத் தேக்குதல் என்பது தடுத்து நிறுத்துதல் ஆகும். நீர்த்… Read More »தேக்குதல்