Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

தாய மாட்டுதல்

சொல் பொருள் தாய் தந்தை வழி உரிமை பாராட்டித் தடுத்து வைத்தல். “தாயமாட்டி விட்டார்கள்; இல்லாவிடில் நேற்றே வந்திருப்பேன்” என்பது வழங்குமொழி. சொல் பொருள் விளக்கம் தாய் தந்தை வழி உரிமை பாராட்டித் தடுத்து… Read More »தாய மாட்டுதல்

தாம்படிப்பு

சொல் பொருள் பிணையல் = ஒன்றோடு ஒன்று பிணைத்து மாடுகளை மிதிக்க விடுதல். பிணைத்தற்கு உரிய கயிறு ‘ தாம்பு’ ஆகும். தாம்பால் பிணித்து மிதிப்பதால் (கதிரடித்தல் போல ) தாம்படிப்பு என்பது கம்பம்… Read More »தாம்படிப்பு

தாதாரி

சொல் பொருள் தாய்வழியில் வந்த உரிமையாளர் ( பங்காளி ) தாதாரி எனப்படுதல் விருதுநகர் வட்டார வழக்காகு சொல் பொருள் விளக்கம் தாய்வழியில் வந்த உரிமையாளர் ( பங்காளி ) தாதாரி எனப்படுதல் விருதுநகர்… Read More »தாதாரி

தாத்து

சொல் பொருள் தாழ்ந்து பள்ளமாக உள்ள இடத்தைத் தாத்து (தாழ்த்து) என்பது தென்னக வழக்காகும் சொல் பொருள் விளக்கம் தாழ்ந்து பள்ளமாக உள்ள இடத்தைத் தாத்து (தாழ்த்து) என்பது தென்னக வழக்காகும். தாழ்த்து =… Read More »தாத்து

தாட்டி

சொல் பொருள் தாட்டி, தாட்டிகம் என்பவை வலிமை என்பதன் பொருள் வழிப்பட்டு வழங்குதல் நெல்லை வழக்கு. சொல் பொருள் விளக்கம் தாட்டி, தாட்டிகம் என்பவை வலிமை என்பதன் பொருள் வழிப்பட்டு வழங்குதல் நெல்லை வழக்கு.… Read More »தாட்டி

தாச்சி

சொல் பொருள் தா(ய்)ச்சி என்பது தலைமை என்னும் பொருளில் திருப்பாச்சேத்தி வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் தா(ய்)ச்சி என்பது தலைமை என்னும் பொருளில் திருப்பாச்சேத்தி வட்டார வழக்காக உள்ளது. தாயே குடும்ப… Read More »தாச்சி

தாங்கல்

தாங்கல்

தாங்கல் என்பது ஏரி, நீர்நிலை. 1. சொல் பொருள் (பெ) 1. நீர்நிலை, 2. ஏரி, தாங்கல் என்பது ஏரி என்னும் பொருள் தாங்கியது. (பெ) 3. வட்டார வழக்கில் தாங்கல் வருத்தம் என்னும்… Read More »தாங்கல்

தன்னக் கட்டுதல்

சொல் பொருள் வாங்கிய கடனைத் தீர்ப்பதும் தன்னக்கட்டுதல் ஆகும் மாறுபட்டு இருப்பாரை அல்லது மனம் மாறி இருப்பாரைச் சரிப்படுத்துவதைத் தன்ன(னை)க் கட்டுதல் என்பது முகவை, மதுரை வட்டார வழக்குகள் சொல் பொருள் விளக்கம் மாறுபட்டு… Read More »தன்னக் கட்டுதல்

தறிகெடுதல்

சொல் பொருள் தறிகெடுதல் என்பது நிலைகெட்டு அலைதல் பொருளது இது அவித்தல் என்னும் பொருளில் கம்பம் வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் தறி என்பது நிலைபெறல், ஊன்றுதூண். தறிகெடுதல் என்பது நிலைகெட்டு… Read More »தறிகெடுதல்

தளிகை

சொல் பொருள் கோயிலில் வழங்கப்படும் தெய்வ உணவு அல்லது திருவுணவு சொல் பொருள் விளக்கம் தளி = கோயில்; தளிகை = கோயிலில் வழங்கப்படும் தெய்வ உணவு அல்லது திருவுணவு. இது ஐயங்கார் வகையினரால்… Read More »தளிகை