Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

சிலுப்பி

சொல் பொருள் சொல்வதை முகம் கொடுத்துக் கேளாமல் திருப்புதலைச் சிலுப்புதல் என்பது முகவை வழக்கு சிலுப்பி என்பதற்குத் தோசை புரட்டும் கரண்டி என்னும் வழக்கு உசிலம்பட்டி வட்டார வழக்கு ஆகும் மோர் கடைதலைச் சிலுப்புதல்… Read More »சிலுப்பி

சில்லுக்காப் பாதை

1. சொல் பொருள் சிறியதாய ஒற்றையடிப் பாதையைக் கொங்கு நாட்டினர் சில்லுக்காப் பாதை என்பர். 2. சொல் பொருள் விளக்கம் சிறியதாய ஒற்றையடிப் பாதையைக் கொங்கு நாட்டினர் சில்லுக்காப் பாதை என்பர். சில்லு =… Read More »சில்லுக்காப் பாதை

சில்லான்

சொல் பொருள் ஓணான் இனத்தில் சிறியதாகிய உயிரியைச் சில்லான் என வழங்குதல் தென்னக வழக்கு சொல் பொருள் விளக்கம் ஓணான் இனத்தில் சிறியதாகிய உயிரியைச் சில்லான் என வழங்குதல் தென்னக வழக்கு. சில் =… Read More »சில்லான்

சில்லாப்பு

சொல் பொருள் சில்லாப்பு, குளிர் என்னும் பொருளில் சீர்காழி வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் சில்லிடுதல் = சில்லாப்பு (சில்லார்ப்பு); குளிர்தல். சில்லாப்பு, குளிர் என்னும் பொருளில் சீர்காழி வட்டார வழக்காக… Read More »சில்லாப்பு

சில்லாட்டை

சொல் பொருள் பதனீர் வடிகட்டும் பன்னாடையைச் சில்லாட்டை என்பது நாகர்கோயில் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் பதனீர் வடிகட்டும் பன்னாடையைச் சில்லாட்டை என்பது நாகர்கோயில் வட்டார வழக்கு. சிறிய வடிகட்டி என்னும் பொருளது.… Read More »சில்லாட்டை

சிப்பிலி

சொல் பொருள் சல்லடை, வடிகட்டி என்பவற்றைச் சிப்பிலி, சிப்பிலித் தட்டு என்பது முகவை வட்டார வழக்கு யாழ்ப்பாண வழக்கில், தொட்டில் என்பது சிப்பிலி என வழங்கப்படுகின்றது சொல் பொருள் விளக்கம் சல்லடை, வடிகட்டி என்பவற்றைச்… Read More »சிப்பிலி

சித்திரை விடுதல்

சொல் பொருள் கோடை விடுமுறை என்பது பள்ளிக் கூடங்களில் வழங்கும் பொது வழக்கு. அவ்விடுமுறை சித்திரை, வைகாசி மாதங்களில் வருதலால் (ஏப்ரல், மே) அதனைச் சித்திரை விடுதல் என உசிலம்பட்டி வட்டாரத்தார் வழங்குகின்றனர் சொல்… Read More »சித்திரை விடுதல்

சிட்டிக்கல்

சொல் பொருள் தட்டாங்கல் என விளையாடும் விளையாட்டை விருதுநகர் வட்டாரத்தில் சிட்டிக்கல் என வழங்குகின்றனர் சொல் பொருள் விளக்கம் தட்டாங்கல் என விளையாடும் விளையாட்டை விருதுநகர் வட்டாரத்தில் சிட்டிக்கல் என வழங்குகின்றனர். மேலே தட்டான்… Read More »சிட்டிக்கல்

சிகடு

சொல் பொருள் கசடு என்பது குற்றம் என்னும் பொருளில் இலக்கிய வழக்கு மக்கள் வழக்கு ஆகிய இருவகை வழக்குகளுக்கும் உரிய சொல். அழுக்கு என்னும் பொருளும் அதற்கு உண்டு. செங்கற்பட்டு மாவட்ட வழக்கில் கசடு… Read More »சிகடு

சிக்கடி

சொல் பொருள் சீனியவரை கொத்தவரை என வழங்கும் ஓர் அவரை வகையைத் தருமபுரி வட்டாரத்தார் சிக்கடி என வழங்குகின்றனர் சொல் பொருள் விளக்கம் சீனியவரை கொத்தவரை என வழங்கும் ஓர் அவரை வகையைத் தருமபுரி… Read More »சிக்கடி