Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

குறும்பை

சொல் பொருள் குட்டையான ஓர் ஆட்டு வகை குறும்பை என வழங்கப்படுதல் பொது வழக்கு. ஆனால் உசிலம்பட்டி வட்டாரத்தில் ஆட்டுக் குட்டியைக் குறும்பை என வழங்குகின்றனர் சொல் பொருள் விளக்கம் குட்டையான ஓர் ஆட்டு… Read More »குறும்பை

குறுங்கட்டு

சொல் பொருள் நாகர்கோயில் வட்டாரத்தில் குறுங்கட்டு என்பது அமர் பலகை (பெஞ்சு) என்னும் பொருளிலும், பெருவிளை வட்டாரத்தில் நாற்காலி என்னும் பொருளிலும் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் நாகர்கோயில் வட்டாரத்தில் குறுங்கட்டு என்பது அமர்… Read More »குறுங்கட்டு

குறுக்கம்

சொல் பொருள் நீளத்திலும் அகலத்திலும் குறுகத் தறித்து வைக்கப்பட்ட ஓரளவான நிலப்பகுதி குறுக்கம் எனப்படும். அது ஏக்கர் என வழங்கப்பட்டது சொல் பொருள் விளக்கம் நீண்டும் அகன்றும் கிடக்கும் நிலப்பரப்பை அளந்து நீளத்திலும் அகலத்திலும்… Read More »குறுக்கம்

குறியெதிர்ப்பு

1. சொல் பொருள் கொடுத்த பொருள் அளவுக்கு மீளக் கைம்மாற்றாகக் கொடுப்பது குறிஎதிர்ப்பு எனப்படுவது பழவழக்கு. புறநானூற்றுக் கால ஆட்சியது அது 2. சொல் பொருள் விளக்கம் கொடுத்த பொருள் அளவுக்கு மீளக் கைம்மாற்றாகக்… Read More »குறியெதிர்ப்பு

குறியமுண்டு

சொல் பொருள் ‘குறியமுண்டு‘ (கோவணம்) என்பது அகத் தீசுவர வட்டார வழக்காகும் சின்னஞ்சிறுதுணி என்னும் பொருளில் வரும் சொல் பொருள் விளக்கம் முண்டு என்பது துண்டு. முண்டும் முடிச்சுமாகக் கட்டை இருக்கிறது உடைப்பது அரிது… Read More »குறியமுண்டு

குழியல்

சொல் பொருள் உண்கலங்களில் ஒன்றாகிய கும்பா என்பதைக் குழியல் என நாகர்கோயில் வட்டாரத்தார் வழங்குவர் சொல் பொருள் விளக்கம் உண்கலங்களில் ஒன்றாகிய கும்பா என்பதைக் குழியல் என நாகர்கோயில் வட்டாரத்தார் வழங்குவர். கும்பாவின் வட்டவடிவும்,… Read More »குழியல்

குழிமாடு

சொல் பொருள் குழிமாடு என்பது சுடுகாடு என்னும் பொருளில் மேலூர் வட்டார வழக்கில் உள்ளது சொல் பொருள் விளக்கம் குழிமாடு என்பது சுடுகாடு என்னும் பொருளில் மேலூர் வட்டார வழக்கில் உள்ளது. இறந்தாரை அடக்கம்… Read More »குழிமாடு

குழிசை

சொல் பொருள் மருந்தாகப் பயன்படும் மாத்திரைகளைக் குழிசை என்பது நாகர்கோயில் வட்டாரவழக்கு சொல் பொருள் விளக்கம் மருந்தாகப் பயன்படும் மாத்திரைகளைக் குழிசை என்பது நாகர்கோயில் வட்டாரவழக்கு. மாத்திரை பெரிதும் உருண்டை வடிவில் இருப்பது. அதனால்… Read More »குழிசை

குல்லம்

சொல் பொருள் வஞ்சகம் அல்லது சூது கருதுதல் குல்லம் எனப்படும் சொல் பொருள் விளக்கம் வஞ்சகம் அல்லது சூது கருதுதல் குல்லம் எனப்படும். பழகிக் கொண்டே பாழும் எண்ணம் வைத்து வீழ்த்துதற்குக் காலம் நோக்கியிருப்பவர்… Read More »குல்லம்

குருச்சி

சொல் பொருள் இது, தக்கலை வட்டாரத்தில் விதை என்னும் பொருளில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் குரு, குருவன், குருத்துவம் என்னும் வழியில் இலக்கிய ஆட்சி பெறும் சொல்லன்று குருச்சி. இது, தக்கலை வட்டாரத்தில்… Read More »குருச்சி