Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

கவ்வாங்கல்

சொல் பொருள் கவட்டை என்னும் கவணையில் வைத்து அடிக்கும் கல்லைக் கவ்வாங்கல் என்பது நெல்லை வழக்காகும் சொல் பொருள் விளக்கம் கவட்டை என்னும் கவணையில் வைத்து அடிக்கும் கல்லைக் கவ்வாங்கல் என்பது நெல்லை வழக்காகும்.… Read More »கவ்வாங்கல்

கலுசம்

சொல் பொருள் கால் சட்டை சொல் பொருள் விளக்கம் கால் சட்டை என்பதைக் ‘கலுசம்’ என வழங்குதல் விளவங் கோடு வட்டார வழக்காகும். ‘கால் சராய்’ என்பது தென்னகப் பொது வழக்காகும். இன்னும் ‘அரைக்கால்… Read More »கலுசம்

கலவித்து விட்டு

சொல் பொருள் சண்டை போட்டு விட்டுப் போவதைக் கலவித்து விட்டுப் போய்விட்டான்(ள்) என்பது கிள்ளியூர் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் சண்டை போட்டு விட்டுப் போவதைக் கலவித்து விட்டுப் போய்விட்டான்(ள்) என்பது கிள்ளியூர்… Read More »கலவித்து விட்டு

கலவன்

சொல் பொருள் பயிர் நெருக்கமாக இல்லாமல் இடைவெளி மிகுதியாக இருப்பதைப் பயிர் கலவனாக இருக்கிறது என்பது உழவுத் தொழில் வழக்காகும் சொல் பொருள் விளக்கம் பயிர் நெருக்கமாக இல்லாமல் இடைவெளி மிகுதியாக இருப்பதைப் பயிர்… Read More »கலவன்

கலவடை

சொல் பொருள் கலங்கள் ஏனங்கள் வைப்பதற்குக் கட்டும் மேடையைக் கலவடை என்பது கட்டடத் தொழிலாளர் வழக்கு சொல் பொருள் விளக்கம் கலங்கள் ஏனங்கள் வைப்பதற்குக் கட்டும் மேடையைக் கலவடை என்பது கட்டடத் தொழிலாளர் வழக்கு.… Read More »கலவடை

கல்லுமுறி

சொல் பொருள் கட்டுப்படுவதற்கு அடையாளமாக ஊர்க்கூட்டத்தார் முன் வைக்கப்படும் கல், கல்லுமுறி எனப்படும் சொல் பொருள் விளக்கம் கட்டுப்படுவதற்கு அடையாளமாக ஊர்க்கூட்டத்தார் முன் வைக்கப்படும் கல், கல்லுமுறி எனப்படும். இது திருப்பரங்குன்ற வட்டாரவழக்கு. முறி… Read More »கல்லுமுறி

கல்லக்காரம்

சொல் பொருள் கல்லக்காரம் எனப் பனங்கற்கண்டை வழங்குதல் யாழ்ப்பாண வழக்காகும் சொல் பொருள் விளக்கம் அக்காரம் இனிப்பு: அக்கார அடிசில் என்பது கற்கண்டுச் சோறு. கல்லக்காரம் எனப் பனங்கற்கண்டை வழங்குதல் யாழ்ப்பாண வழக்காகும் குறிப்பு:… Read More »கல்லக்காரம்

கல்மழை

சொல் பொருள் ஆலங்கட்டிமழை சொல் பொருள் விளக்கம் மழைநீர் மிகு குளிர்ச்சியால் கல்லாகிப் பொழிவதை, ஆலங்கட்டிமழை என்பர். ஆலம் என்பது நீர். பனிக்கட்டி என்பது போல வழங்குவது ஆலங்கட்டி. அதனைக் கல்மழை என்பது மதுரை… Read More »கல்மழை

கரைப்பெண்டு

சொல் பொருள் பரம்பரை முறை வழியால் வந்த பெண் கரைப்பெண்டு என்று வழங்கப்பட்டிருக்கலாம் சொல் பொருள் விளக்கம் சிலதொழில்கள் பரம்பரை உரிமை முறையுடன் செய்யப்பட்டு வந்தன. அவற்றுள் கரை காவல் தொழிலும் ஒன்றாகும். பரம்பரை… Read More »கரைப்பெண்டு

கரைசோறு

சொல் பொருள் மோர்விட்டுக் கரைத்துக் குடிக்கும் சோற்றைக் கரை சோறு என்பது கருவூர் வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் மோர்விட்டுக் கரைத்துக் குடிக்கும் சோற்றைக் கரை சோறு என்பது கருவூர் வட்டார வழக்காகும்.… Read More »கரைசோறு