Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

ஓமலிப்பு

சொல் பொருள் ஏசிப் பழிப்பதை ஓமலிப்பு என்பது நிலக்கோட்டை வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் ஏசிப் பழிப்பதை ஓமலிப்பு என்பது நிலக்கோட்டை வட்டார வழக்காகும். மறுதலிப்பு என்பது போல, ஓமலிப்பு என்பது ஒப்புக்… Read More »ஓமலிப்பு

ஓம்

சொல் பொருள் ஓம் என்பதற்கு ஆம் என்னும் பொருள் கொள்ளல் யாழ்ப்பாண வழக்கு சொல் பொருள் விளக்கம் ஓம் என்பதற்கு ஆம் என்னும் பொருள் கொள்ளல் யாழ்ப்பாண வழக்கு. அவ்வழக்கு குமரி மாவட்டத்திலும் உண்டு.… Read More »ஓம்

ஓணி

சொல் பொருள் ஓணி என்பது கம்பம் வட்டார வழக்கில் ஒற்றையடிப் பாதையைக் குறித்து வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் ஓணி என்பது கம்பம் வட்டார வழக்கில் ஒற்றையடிப் பாதையைக் குறித்து வழங்குகின்றது. ஒன்றி, ஒண்டி,… Read More »ஓணி

ஓடு வளை

சொல் பொருள் நெடிதாக வளர்ந்த மூங்கில் ஓடு வளை எனவும் ஓடி வளை எனவும் பழனி வட்டாரத்தில் வழங்குகின்றன சொல் பொருள் விளக்கம் நெடிதாக வளர்ந்த மூங்கில் ஓடு வளை எனவும் ஓடி வளை… Read More »ஓடு வளை

ஓட்டன்

சொல் பொருள் இவ்வோட்டன் என்னும் பெயர் ‘தரகன்’ என்னும் பொருளில் குமரி மாவட்டத்தில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் பூட்டனுக்குத் தந்தையை ஓட்டன் என்பது முறை மரபு. ஓட்டனுக்குமேல் உறவில்லை என்பது பழமொழி. இவ்வோட்டன்… Read More »ஓட்டன்

ஓசைவற்றல்

சொல் பொருள் காய்ந்து உலர்ந்த மிளகாய் வற்றலை ஓசைவற்றல் என்பது எறையூர் (இறையூர்) வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் காய்ந்து உலர்ந்த மிளகாய் வற்றலை ஓசைவற்றல் என்பது எறையூர் (இறையூர்) வட்டார வழக்கு.… Read More »ஓசைவற்றல்

ஓக்காளம்

சொல் பொருள் வாந்தி எடுத்தல் ஓங்காரித்தல் என்பது பொதுவழக்கு. அது ஓக்காளம் எனப்படுதல் நெல்லை வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் வாந்தி எடுத்தல் ஓங்காரித்தல் என்பது பொதுவழக்கு. அது ஓக்காளம் எனப்படுதல் நெல்லை… Read More »ஓக்காளம்

ஒறுத்துவாய்

சொல் பொருள் ஏனங்கள் உடைந்தோ நெளிந்தோ போனாலும் மண்வெட்டி கோடரி வாய்முனை சிதைவாய்விட்டாலும் கொறுவாய் ஆகிவிட்டது என்பர். ஒறுவாய், ஒறுத்துவாய் என வழங்குதல் கீழைச் செவல்பட்டி வட்டார வழக்காகும். சொல் பொருள் விளக்கம் ஏனங்கள்… Read More »ஒறுத்துவாய்

ஒழுங்கை

சொல் பொருள் ஒழுங்காக அமைந்த தெருவை ஒழுங்கை என்பது யாழ்ப்பாண வழக்கு சொல் பொருள் விளக்கம் வரிசையாகச் செல்லும் வண்டிகளை ஒழுகை என்பதும், வரிசையாகச் செல்லும் எறும்புகளை ஒழுக்கு என்பதும் பழமையான இலக்கிய வழக்கு.… Read More »ஒழுங்கை

ஒலுங்கு

சொல் பொருள் ஓயாமல் ஒலிக்கும் கொசுவின் ஒலி சொல் பொருள் விளக்கம் ‘ஒல்’ என்பது ஒலி. ஓயாமல் ஒலிக்கும் கொசுவின் ஒலி கேட்டவர், அவ் வொலி கொண்டு வழங்கிய பெயர் ஒலுங்கு என்பதாம். காதருகே… Read More »ஒலுங்கு