Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

எட்டுக்கும் எழவுக்கும் கூடுதல்

சொல் பொருள் முறை கேடாகச் செயலாற்றுபவரை, “எட்டுக்கும் கூடுவான்; எழவுக்கும் கூடுவான்” என்பது தென்னக வழக்கு சொல் பொருள் விளக்கம் இறப்புச் சடங்குகளுள் எட்டு என்பது எட்டாம் நாள் நிகழும் பங்காளிகள் நிகழ்ச்சி. எழவு… Read More »எட்டுக்கும் எழவுக்கும் கூடுதல்

எட்டாக்கை

சொல் பொருள் மிகத் தொலைவான இடத்தில் உள்ள நிலம், ஊர் முதலியவற்றை அது எட்டாக்கையில் உள்ளது சொல் பொருள் விளக்கம் எட்டாத நீண்ட கையைக் குறிக்காமல், மிகத் தொலைவான இடத்தைக் குறிப்பது வட்டார வழக்குச்… Read More »எட்டாக்கை

எசனை

சொல் பொருள் இசைவாக ஒருவர் ஒருவருடன் இருத்தலை எசனை யாக(இசைவாக) இருப்பதாகக் கூறுவது தென்னக வழக்கு சொல் பொருள் விளக்கம் இசைவாக ஒருவர் ஒருவருடன் இருத்தலை எசனை யாக(இசைவாக) இருப்பதாகக் கூறுவது தென்னக வழக்கு.… Read More »எசனை

எச்சு

சொல் பொருள் எச்சு என்பது மிகுதி என்னும் பொருளில் பழனி வட்டாரத்தில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் எச்சம் என்பது மிகுதி (மீதி)யாக வைத்துச் செல்வது என்னும் பொருளது. எஞ்சுதல் என்பதும் மிகுதல் பொருளதே.… Read More »எச்சு

எக்கல்

சொல் பொருள் எக்கல் என்பது மணல்மேடு குறித்தல் திருவரங்க வட்டார வழக்காகும். இது பேராவூரணி வட்டார வழக்காகவும் உள்ளது சொல் பொருள் விளக்கம் மார்பை மேலே தூக்குதல் எக்குதல்; எக்கல் எனப்படும். அதுபோல் அலை… Read More »எக்கல்

எக்கச்சக்கம்

சொல் பொருள் நெருக்க மிக்க – அடைசலான – ஏராளமான நிலைக்கு எக்க சக்கம் என்பது தென்னக வழக்கு சொல் பொருள் விளக்கம் எக்கம் = எக்குதல், மேலெழும்புதல். சக்கம் கீழே தாழ்ந்து குனிதல்.… Read More »எக்கச்சக்கம்

ஊற்றாங்கால்

ஊற்றாங்கால்

1. சொல் பொருள் கிணறுகளில் நீர் ஊறுதற்கு வாய்ப்பாக அமைந்த குளம் குட்டைகளை ‘ஊற்றாங்கால்’ என்பது கொங்கு நாட்டு வழக்கு 2. சொல் பொருள் விளக்கம் கிணறுகளில் நீர் ஊறுதற்கு வாய்ப்பாக அமைந்த குளம்… Read More »ஊற்றாங்கால்

ஊழையாடு

சொல் பொருள் மூக்கில் இருந்து ஒழுகும் சளியை ஊழை என்பது வழக்கம் சொல் பொருள் விளக்கம் மூக்கில் இருந்து ஒழுகும் சளியை ஊழை என்பது வழக்கம். ஒட்டாத சதை ஊழைச் சதை எனப்படும். ஆட்டு… Read More »ஊழையாடு

ஊர் சுற்றி

சொல் பொருள் கள்ளிக்குடி, பெட்டவாய்த்தலை வட்டாரங்களில் ஊர் சுற்றி என்பது பன்றியைக் குறிப்பதாக உள்ளது சொல் பொருள் விளக்கம் ஊர் சுற்றி வருவாரை ஊர் சுற்றி என்பது வழக்கம். உலகம் சுற்றி, தெருச் சுற்றி… Read More »ஊர் சுற்றி

ஊத்தி

சொல் பொருள் வயிறு சொல் பொருள் விளக்கம் ஊற்றி என்பது ஊத்தி என மக்கள் வழக்கில் உள்ளது. ஊற்றப்படும் பொருள் சேரும் இடம் வயிறு ஆதலால் அதனை ஊத்தி என வழங்குதல் விளவங்கோடு வட்டார… Read More »ஊத்தி