சொல் பொருள்
சொல்விளம்பி – கள், சாராயம்
சொல் பொருள் விளக்கம்
குடியர்கள் கள்ளைச் சொல்விளம்பி என்பர் என்பது இலக்கண நூல்களில் சொல்லப்படும் “குழுஉக்குறி” குழூஉ ஆவது கூட்டம். இவண் குடியர் கூட்டம். அவர்கள் தங்கள் குடிப்புப் பொருளுக்குச் சொல்விளம்பி எனப் பெயரிடுவானேன்? குடித்தவன் தன் மனத்திலுள்ளதையெல்லாம் தன் மதி மயக்கத்தில் கொட்டித் தீர்த்து விடுவான். அவன் அவ்வாறு சொல்ல இடமாக இருப்பது மதுவே ஆதலால் அதனை அப்பெயரால் குறித்தானாம். குடித்தவனுக்கு மதிமயக்கம் இருக்கும்போதுதான் சொல்வதை அறிய மாட்டானே எனின், குடித்து மயங்குபவனை அவன் பாராதவனா என்ன?
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்