சொல் பொருள்
திருச்செந்தூர், நெல்லை வட்டாரங்களில் தங்காலம் என்பது மழைக்காலம் குறித்து வழங்குகின்றது.
சொல் பொருள் விளக்கம்
காலம் என்பதே மழைக்காலத்தைக் குறித்தல் வழக்கு. காலப்பயிர், கோடைப்பயிர் என்பது உழவர் வழக்கு. காலம், தற்காலம் எனவும் வழங்கும். தன் என்பது மழையைக் குறிப்பது பழவழக்கு. “தற்பாடிய தளியுணவிற் புள்” என்பது வானம்பாடி பற்றிய பட்டினப்பாலை அடி. தற் காலம் > தன்காலம் > தங்காலம் எனப்படும். திருச்செந்தூர், நெல்லை வட்டாரங்களில் தங்காலம் என்பது மழைக்காலம் குறித்து வழங்குகின்றது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்